Back
ஓவியம்
உருவ மற்றும் அரூப ஓவியங்கள்
ஓவியம் இருப்பிடம் #
ஊர் வகுரணி
வட்டம் உசிலம்பட்டி
மாவட்டம் மதுரை
ஓவியத்தின் பெயர் உருவ மற்றும் அரூப ஓவியங்கள்
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை பாறை ஓவியங்கள்
விளக்கம்

     மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து சுமார் 10 கி.மீ தெற்கே அமைந்துள்ள வகுரணி என்ற கிராமம். இங்கு அமைந்துள்ள புலிக்கரடு என்ற இடத்தில் கிழக்கு திசை நோக்கி உள்ள குகைத்தளம் ஒன்றில் ஓவியங்கள் காணப்படுகின்றது. வெவ்வேறு காலகட்டங்களில் வரையப்பட்ட இந்த ஓவியங்களில் சில வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இங்கு காணப்படும் பெரும்பாலான ஓவியங்கள் வெள்ளை வண்ணத்தில் கோட்டோவியங்களாக உள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் சிவப்பு வண்ணத்தால் வரையப்பட்ட வரைவுகள் காணக்கிடைகின்றன.   அவ்வுருவம் புலியின் வடிவத்தை ஒட்டி அமைந்துள்ளது.

     இங்குள்ள ஓவியங்களில் பல, குறியீடுகள் போலக் காணப்படுகின்றது. இவற்றை சில ஆய்வாளர்கள் வானியல் தொடர்பான ஓவியங்கள் எனக் கருதுகின்றனர். அதில் ஒன்று வட்டவடிவில் சூரியனைப் போன்று காணப்படுகின்றது. அதன் ஒளிக்கற்றைகள் காட்டப்பட்டுள்ளது. அதே போல் அதனருகே மற்றொரு வட்டவடிவில் குறைந்த எண்ணிக்கையில் ஆன கற்றைகள் காட்டப்பட்டுள்ளது. அது நிலவாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். இவ்விரு குறியீடுகளுக்கிடையில் இணைக்கும் விதமாக கோடு உள்ளது அதிலும் ஒளிக்கற்றைகள் போல 15 கோடுகள் காணப்படுகின்றது. இது வளர் பிறை மற்றும் தேய்பிறையைக் காட்டும் குறியீடாக இருக்குமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் இதைச் சுற்றியுள்ள குறியீடுகள் யாவும் பிற வானியியல் தொடர்பானவைகளாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. சங்க காலத்துக்கு முந்தைய காலகட்டங்களில் வானியல் தொடர்பான தகவல்கள் பதிவாகவில்லை. அதற்கு பிந்தையக் காலகட்டங்களில் தான் இவை காணப்படுகின்றது.

     இருப்பினும் வானியியல் தொடர்பான தேடல் தொல் மாந்தர்களிடம் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். எழுத்துக்கள் உருவாவதற்கு முந்தைய காலகட்டங்களில் இவை ஓவியங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியம் ஒன்றில் கைகளை உயர்த்திய நிலையில் பெண் உருவம் மார்பகத்தை காட்டும் விதமாக இரண்டு புள்ளிகள் மார்பு பகுதியில் காட்டப்பட்டுள்ளது. பாறை ஓவியங்களில் பெரும்பாலும் ஆண், பெண் வேறுபாட்டை அதிகம் காட்டப்படுவதில்லை. இங்குள்ள ஓவியம் ஒன்றில் வட்ட வடிவ வரைவு காணப்படுகின்றது. அதன் குறுக்கே ஐந்து கட்டங்களாக பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. அதனைச் சுற்றி சில உருவங்கள் வரையப்பட்டுள்ளது. இது ஒரு அலங்கார வரைவாகவோ அல்லது வானியியல் தொடர்பானதாகவோ இருக்கலாம்.  அதுபோல இந்த வரைவுகள் பெருங்கற்கால கல்வட்டங்களை ஒத்த வடிவமைப்பிலும் காணப்படுகிறது.  இம்மலை அடிவாரத்தில் கருப்பு சிவப்பு ஓடுகளும் தாழிகளும் கிடைக்கின்றது.  ஆகையால் இந்த ஓவியம் பெருங்கற்கால நிகழ்வினை பதிவு செய்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள மற்றொரு ஓவியத்தில், மனித உருவம் ஒன்று கையில் ஆயுதத்துடன் வெள்ளை வண்ணத்தில் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது.  இந்த ஆயுதத்தின் வடிவம் வளரி / வளைதடி போல உள்ளது.  இத்தொன்மையான ஆயுதம் இந்தப் பகுதியில் சமீப காலம்வரை இங்குள்ள மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு சான்றாக இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட நடுகல் சிற்பங்களில் வளரி காணப்படுகிறது.

ஒளிப்படம்எடுத்தவர் க.த. காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் க.த. காந்திராஜன்
குறிச்சொற்கள்
சுருக்கம்

புலிக்கரடு குகையில் காணப்படும் ஓவியங்களில் பெருமான்மையானவை குறியீடுகளாகவும் அதில் சில உருவங்கள் அலங்காரக் கூறுகளாகவும் இருக்கலாம். அது போல மனித உருவங்கள் ஆங்காங்கே குறியீடுகளுடனும் தனியாகவும் வரையப்பட்டுள்ளது. மிக அழிந்த நிலையில் சிவப்பு வண்ணத்தில் புலியின் கோட்டோவியம் காணப்படுகிறது. இங்கு வரையப்பட்ட குறியீடுகளை வானியல் தொடர்புடையதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த ஓவியங்கள் பெருங்கற்காலத்திலிருந்து வரலாற்றுக் காலம் வரை வெவ்வேறு காலங்களில் வரையப்பட்டவை. மேலும் சமீபத்திய வரைவுகளும் ஆங்காங்கே தென்படுகின்றது.

உருவ மற்றும் அரூப ஓவியங்கள்
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    24 Files

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

  • TVA_PNT_00055_வகுரணி-00...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Aug 2022
பார்வைகள் 124
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய ஓவியம்