Back
ஓவியம்
ஓவியங்கள் வரையப்பட்ட பாறைக் குன்று, ஓடுகின்ற புலி, விலங்கின் மேல் கட்டமைக்கப்பட்ட தேர், சிவப்பு வண்ணத்தில் மனித உருவங்கள்
ஓவியம் இருப்பிடம் #
ஊர் மயிலாடும்பாறை
வட்டம் கிருஷ்ணகிரி
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஓவியத்தின் பெயர் ஓவியங்கள் வரையப்பட்ட பாறைக் குன்று, ஓடுகின்ற புலி, விலங்கின் மேல் கட்டமைக்கப்பட்ட தேர், சிவப்பு வண்ணத்தில் மனித உருவங்கள்
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை பாறை ஓவியங்கள்
விளக்கம்

மயிலாடும்பாறை என்னும் பகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொகரபள்ளி என்ற ஊரில் இருந்து சுமார் 3 கி.மீ. மேற்கு தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள பாறை குன்று ஒன்றில் உள்ள குழியில் பெரும்பாலான நேரங்களில் நீர் தேங்கியிருக்கும், அதன் அருகே இரண்டு இடங்களில் ஓவியங்கள் காணப்படுகின்றது.

அதில், விலங்குகள் மேல் பயணிக்கும் மனித உருவங்கள், பறவைகள், விலங்குகளை வேட்டையாடல், வில் அம்பு, விலங்குகளை எதிர்த்துப் போராடுவது, போர்க்காட்சி, பாலியல் நிலைகள் ஆகியவை ஓவியங்களில் இங்கு காணப்படும் சில பொதுவான ஓவியங்கள். அதுபோல சண்டையிடும் காட்சி, வரிசையாக நடனம் ஆடுதல், குதிரையில் சவாரி செய்தல்,  கால்நடைகளுடன் மனிதன் போன்றவை இங்கு சித்தரிக்கப்பட்ட சில காட்சிகளாகும். மனிதர்கள் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மேலே உட்கார்ந்திருக்கும் காட்சி பொதுவாக எல்லா ஓவியங்களிலும் மீண்டும் மீண்டும் காணப்படுகின்றது.

ஓவியங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்தி வரையப்பட்டுள்ளன. சில இடங்களில் சிவப்பு வண்ணத்துக்கு மேல்  வெள்ளை வண்ணம் காணப்படுகின்றது. இதன் மூலம் சிவப்பு வண்ணம் காலத்தால் முந்தி வரையப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. ஆகையால் சிவப்பு வண்ணம் புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும்.

இரண்டு வகையான வரி வடிவங்கள் உள்ளன. ஒன்று ஒற்றை வரி வரைபடத்தால் செய்யப்பட்ட ஒரு உருவம் அல்லது சின்னம் மற்றும் வேறு சில சந்தர்ப்பங்களில் ஓவியங்களில் வண்ணம்  நிரப்பும் வகை.  சில இடங்களில் மனித உருவங்கள் சண்டையிடும் நிலையில், ஒருவருக்கொருவர் எதிராக வில் மற்றும் அம்பை வைத்திருக்கிறார்கள்.  ஒரு சில ஓவியங்களில் போட்டியாளர்கள் ஒரு கையில் கேடயத்தையும், மற்றொரு கையில் குதிரையின் பட்டையைப் பிடித்தும் போராடுகிறார்கள்.  அது போல சில நேரங்களில் அவர்கள் அடையாளம் தெரியாத நீண்ட ஈட்டி போன்ற பொருளைப் பயன்படுத்தி இருப்பது தெரியவருகிறது. சண்டைக் காட்சிகளின் நோக்கங்கள் இன்னும் அறியப்பட இயலவில்லை. பெரும்பாலும் நடனக் காட்சியை சித்தரிக்கும் போது அவர்கள் எப்போதும் ஒரு வரிசையில் மனித உருவங்களை வரைகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள பாறை ஓவியங்கள் இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.  ஒன்று பாறை-ஒதுக்குகளின் கூரையிலும் மற்றொன்று கற்திட்டைகளிலும் காணப்படுகின்றன.
மல்லசந்திரம், மகாராஜக்கடை, மால்தாமப்பட்டி, குருவிநாயனப்பள்ளி மற்றும் வரமனகுண்டா போன்ற இடங்களில் கற்திட்டைகளில் காணப்படுவது குறிப்பிடதக்கதாகும்.
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்கள் இரும்பு கால கலாசாரத்துடனும், சில சமயங்களில் புதிய கற்கால கலாசாரத்துடனும் தொடர்புடையவைகளாக இருக்கக்கூடும். மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சியின் படி நுண்கற்காலத்திலிருந்து தொடக்க கால வரலாற்று காலம் வரை புதிய கற்காலம் மட்டும் இரும்பு காலம் ஊடாக பண்பாட்டு பயணம் நிகழ்ந்ததாக அறியமுடிகிறது.
ஒளிப்படம்எடுத்தவர் க.த. காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறையில் காணப்படும் பாறை ஓவியங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் வரையப்பட்டவை. இங்கு ஓவியங்கள் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. சமீபத்தில் இவ்விடத்தில் நடந்த அகழாய்வில் கண்டறிந்த இரும்பு வாளின் காலம் 4200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக  கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஓவியங்களும் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கக்கூடும்.

ஓவியங்கள் வரையப்பட்ட பாறைக் குன்று, ஓடுகின்ற புலி, விலங்கின் மேல் கட்டமைக்கப்பட்ட தேர், சிவப்பு வண்ணத்தில் மனித உருவங்கள்
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    26 Files

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

  • TVA_PNT_00057_கிருஷ்ண...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 16 Sep 2022
பார்வைகள் 111
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 8

தொடர்புடைய ஓவியம்