ஓவியம்
அழகர்கோயில்
ஓவியம் இருப்பிடம் #
ஊர் அழகர்-கோயில்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
ஓவியத்தின் பெயர் அழகர்கோயில்
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை பாறை ஓவியங்கள்
விளக்கம்

மதுரைக்கு அருகில் உள்ள அழகர்கோயில் வளாகத்தின் கிழக்குப் பக்கத்தில் உள்ள பஞ்ச பாண்டவர் குகையின் விதானத்தில் மேற்குப்பக்கத்தில் சில ஓவியங்கள் ஆங்காங்கே சிவப்பு வண்ணங்களால் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்களில் தனியாக மனித உருவங்களும், விலங்கு உருவங்களும், மனிதனும்- விலங்குகளும் சேர்ந்துள்ள உருவங்களும், சில குறியீடுகளும் காணப்படுகின்றன. இங்குள்ள அனைத்து ஓவியங்களும் கோட்டோவியமாகவே உள்ளது, அதே போல கோட்டோவியத்தில் உட்புறம் வண்ணங்கள் கொண்டு நிறப்புவதற்கு பதில் சிறு கோடுகளால் உடம்பின் உட்புறங்கள் நிறப்பப்பட்டுள்ளன. விலங்கு உருவங்கள் நேர்த்தியான அளவு மற்றும் வடிவமைப்பில் உள்ளது. இக் குகையில் கி.மு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த கற்படுக்கைகளும், தமிழ்-பிராமிக் கல்வெட்டும், 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சிற்பமும், வட்டெழுத்தும் காணப்படுகின்றன. இவ்வோவியங்கள் புதிய கற்காலத்தின் இறுதியிலோ அல்லது பெருங்கற்கால துவக்கத்திலோ வரைந்திருக்க்க்கூடும்

ஒளிப்படம்எடுத்தவர் க.த.காந்திராஜன்
குறிச்சொற்கள்
சுருக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள பாறை ஓவியங்களில் இங்குள்ள ஓவியங்கள் குறிப்பிட்த்தக்கவையாகும். இரு முக்கோண வடிவைக் கொண்டு மனித உருவங்கள் வரைவது பாறை ஓவியங்களில் பல இடங்களில் காணக்கிடைகின்றது, இவ்வகை ஓவியங்கள் இங்கு உள்ளன. இதே போல ஓவியங்கள் திருமலை (சிவகங்கை), கீழ்வாலை (விழுப்புரம்) போன்ற இடங்களிலும் கிடைக்கின்றது.

குறிப்புதவிகள்
அழகர்கோயில்
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    10 Files

  • TVA_PNT_00003_அழகர்-க...

  • TVA_PNT_00003_அழகர்-க...

  • TVA_PNT_00003_அழகர்-க...

  • TVA_PNT_00003_அழகர்-க...

  • TVA_PNT_00003_அழகர்-க...

  • TVA_PNT_00003_அழகர்-க...

  • TVA_PNT_00003_அழகர்-க...

  • TVA_PNT_00003_அழகர்-க...

  • TVA_PNT_00003_அழகர்-க...

  • TVA_PNT_00003_அழகர்-க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 10 May 2017
பார்வைகள் 92
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய ஓவியம்