வடிவியல் வடிவமைப்புகள், முக்கோண வடிவமைப்பு, மான், வேட்டைச் சமூக மனித உருவங்கள் மற்றும் அடையாளம் காண இயலா வடிவங்கள்
| ஓவியம் இருப்பிடம் | # |
|---|---|
| ஊர் | விராலியூர் |
| வட்டம் | தொண்டாமுத்தூர் |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| ஓவியத்தின் பெயர் | வடிவியல் வடிவமைப்புகள், முக்கோண வடிவமைப்பு, மான், வேட்டைச் சமூக மனித உருவங்கள் மற்றும் அடையாளம் காண இயலா வடிவங்கள் |
| ஓவியத்தின் அமைவிடம் | # |
| ஓவியத்தின்வகை | பாறை ஓவியங்கள் |
|
விளக்கம்
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 32 கி.மீ வடமேற்கே தொண்டாமுத்தூர் வட்டத்தில் அமைந்திருக்கிறது விராலியூர். இவ்வூரின் வலது புறத்தில் அரணாக வீற்றிருக்கிறது நீண்ட மலைத்தொடர். இம்மலையின் அடிவாரத்தில் வேட்டைக்காரன் கோயில் எனும் வேட்டைச்சமூகத்தினரின் கோயில் உள்ளது. இக்கோயிலிலிருந்து சுமார் 6 – 7 கி.மீ தொலைவில் மேல் சாமி குகை எனும் நீண்ட பாறை ஒதுக்கு உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3600 அடி உயரத்தில் இருக்கின்றது. மேலும் இவ்விடம் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மூல கங்கல் எனும் பழங்குடியினர் கிராமத்தில் இருந்து சுமார் 4 – 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது குடியிருப்புக்கான இடமாய் இருக்க வாய்ப்பில்லை, வனத்திற்கு தேன் எடுக்க அல்லது வேட்டை போன்ற பிற பணிக்காக வரும் பொழுது தற்காலிகமாக ஓய்வெடுக்கும் இடமாக உள்ளது. இன்றளவும் இங்கு தேன் கூடுகள் அதிக அளவில் உள்ளன. மேலும் யானை, மாடு போன்ற பெரிய விலங்குகள் வர இயலாத இடம். இப்பாறைக்கு மிக அருகில் இரண்டு சுனை ஊற்றுக்கள் இயற்கையாகவே அமைந்துள்ளது. இது விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் குடிநீர் ஆதாரமாக இருக்கின்றது. இப்பாறை ஒதுக்கு வடக்கு– தெற்காக சுமார் 150 அடி நீளத்திலும், 100 அடி உயரத்திலும் கிழக்கு திசை பார்த்து அமைந்துள்ளது. இங்கு சிவப்பு வண்ணத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஓவியங்களும், வெள்ளை வண்ணத்தில் ஒரு ஓவியத்தொகுதியும் காணப்படுகின்றது. விலங்குகள், மனித உருவங்கள், ஏணி போன்ற வடிவங்கள், சதுரம் மற்றும் முக்கோண கட்டங்கள், அடையாளம் காண இயலாத வரைவுகள் ஆகியவை காணப்படுகின்றன. இங்குள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கவைகளாக முத்தமிடும் மான்கள் மற்றும் வில் அம்பு மற்றும் குறுவாளுடன் கூடிய வேட்டைக்காரர்கள் ஆகிய ஓவியங்கள் கருதப்படுகின்றன. இவ்வோவியங்கள் பெரும்பாலும் கோட்டோவியங்களாகவே வரையப்பட்டுள்ளன. மேலும் இவ்வோவியங்கள் மூன்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஓவியர்களால் வரைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. கொங்கு மண்டலத்தில் குமுதிபதி, வெள்ளருக்கம்பாளையம், கோவனூர் போன்ற இடங்களில் கிடைத்த பாறை ஓவியங்கள் பெரும்பாலும் வெள்ளை வண்ணத்திலேயே உள்ள நிலையில் இப்பாறை ஒதுக்கில் அதிக அளவில் சிவப்பு வண்ண ஓவியங்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல சதுரம் மற்றும் முக்கோணக் கட்டங்களில் அலங்கார வரைவுகள் வரைந்திருப்பது அரிதான காட்சியாகும். இங்கு காணப்படும் சிவப்பு வண்ண ஓவியங்களை சுமார் 3000 – 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்தவையாகக் கருத இடமுண்டு. அதே போல வெள்ளை வண்ண ஓவியத்தில் காணப்படும் இரண்டு மனித உருவங்களும் இடுப்பில் குறுவாள் வைத்திருப்பதால் அவை இரும்பு காலத்தைச் சேர்ந்தவைகளாகக் கருதப்படுகின்றது. அவை சுமார் 2000 – 2500 ஆண்டுகளுக்கு முந்தியவைகளாக இருக்கக்கூடும். கோவை மாவட்டத்தில் பல இடங்களில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த பொருட்கள் அகழாய்வுகளிலும், மேற்பரப்பு ஆய்வுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை ஆய்வாளர் திரு. க.த. காந்திராஜன், குமரவேல் ராமசாமி மற்றும் சுதாகர் நள்ளியப்பன் ஆகியோர் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| குறிச்சொற்கள் | |
வடிவியல் வடிவமைப்புகள், முக்கோண வடிவமைப்பு, மான், வேட்டைச் சமூக மனித உருவங்கள் மற்றும் அடையாளம் காண இயலா வடிவங்கள்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
20 Files
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
-
TVA_PNT_00054_விராலிய...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Aug 2022 |
| பார்வைகள் | 127 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |