Back
ஓவியம்
விலங்குகள், மனிதர்கள், திமிலுள்ள மாடுகள், மான், நாய், யானை
ஓவியம் இருப்பிடம் #
ஊர் அருகுவேலி
வட்டம் மயிலாடும்பாறை
மாவட்டம் மதுரை
ஓவியத்தின் பெயர் விலங்குகள், மனிதர்கள், திமிலுள்ள மாடுகள், மான், நாய், யானை
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை பாறை ஓவியங்கள்
விளக்கம்

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உள்ள மலை கிராமம் அருகுவேலி. இங்கு பளியர் இன பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர்இவ்விடம் பாண்டிய நாட்டிலிருந்து சேர நாட்டிற்கு செல்லும் வழித்தடத்தில் வருசநாடு மலைத்தொடரில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு மேற்கே, சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இது மக்கள் வாழ்வதற்கு தகுதியான இருப்பிடம்இங்கே ஐம்பதிற்கும் மேற்பட்ட ஓவியங்கள் வெள்ளை வண்ணத்தில் கோட்டோவியங்களாகவும், அடர் வண்ண ஓவியங்களாகவும் உள்ளது. இதில் பல ஓவியங்கள் அழிந்த நிலையில் உள்ளனஇவற்றில் விலங்குகளும் மனிதர்களும் தனித்தனியாகவும் குழுவாகவும் காணப்படுகிறதுஅடர்வண்ணத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் யாவும் மாடுகளையே மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுஇங்கு காணப்படும் மாடுகள் பெரிய திமில்களோடும் பெரிய கொம்புகளோடும் மிக நேர்த்தியான உடலமைப்புடன், பக்கவாட்டு தோற்றத்தில் வரையப்பட்டுள்ளனஇவ்வோவியங்கள் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கால்நடை சமூகத்தின் ஓவியப் படைப்புகளாக கருதப்படுகிறதுஅதுபோல கோட்டோவியத்தில் வரையப்பட்ட உருவங்களில், மாடு, மான். நாய், யானை மற்றும் அடையாளம் காண இயலா உருவங்கள் தனியாக வரையப்பட்டுள்ளதுமேலும் மனித உருவங்கள் குதிரையின் மீதேறி குழுவாக சண்டையிடும் காட்சிகள் மற்றும் வேட்டைக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளதுஇவை பெருங்கற்காலத்து ஓவியங்களை ஒத்து அமைந்துள்ளதுஇங்குள்ள ஒவியங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஓவியர்களால் வரையப்பட்டுள்ளது. இங்குள்ள ஓவியங்களில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் பெரும்பாலும் சமவெளிப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வினை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் க.த. காந்திராஜன்
குறிச்சொற்கள்
விலங்குகள், மனிதர்கள், திமிலுள்ள மாடுகள், மான், நாய், யானை
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    11 Files

  • TVA_PNT_00063_அருகுவே...

  • TVA_PNT_00063_அருகுவே...

  • TVA_PNT_00063_அருகுவே...

  • TVA_PNT_00063_அருகுவே...

  • TVA_PNT_00063_அருகுவே...

  • TVA_PNT_00063_அருகுவே...

  • TVA_PNT_00063_அருகுவே...

  • TVA_PNT_00063_அருகுவே...

  • TVA_PNT_00063_அருகுவே...

  • TVA_PNT_00063_அருகுவே...

  • TVA_PNT_00063_அருகுவே...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 17 Oct 2022
பார்வைகள் 366
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 13

தொடர்புடைய ஓவியம்