Back
ஓவியம்
குதிரையின் மீதேறி இருவர் ஆயுதத்தால் தாக்கிக்கொள்வது, மற்றொரு வீரன்கையில் ஆயுத்த்துடன், மிருகம் ஒன்று
ஓவியம் இருப்பிடம் #
ஊர் மல்லபாடி
வட்டம் பர்கூர்
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஓவியத்தின் பெயர் குதிரையின் மீதேறி இருவர் ஆயுதத்தால் தாக்கிக்கொள்வது, மற்றொரு வீரன்கையில் ஆயுத்த்துடன், மிருகம் ஒன்று
ஓவியத்தின் அமைவிடம் #
விளக்கம்

          கிருஷ்ணகிரி மாவட்டத்தில், திருப்பத்தூர் – பர்கூர் சாலையில் பர்கூரிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ.தொலைவில்  மல்லபாடி எனும் கிராமம் உள்ளது.  இக்கிராமத்துக்குப் பின்னால் உள்ள மலை அடிவாரத்தில்  விஜயநகர காலத்துப் பெருமாள் கோயில் உள்ளது. அக்கோயிலில் இருந்து சுமார் 300 அடி தூரத்தில்  உள்ள வண்ணாத்திபாறை / வண்ணான் கெவி எனும் பாறை ஒதுக்கில் சில ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.  தமிழகத்தில் முதன் முறையாக பாறை ஓவியம் 1980 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழக தொல்லியல் துறை ஆய்வாளர்களால்  கண்டுபிடிக்கப்பட்டன.

          இங்கு குதிரையின் மீது அமர்ந்துள்ள  இருவர் நீண்ட ஈட்டி போன்ற ஆயுதத்தால் ஒருவரை ஒருவர் தாக்க முனைவது போல உள்ளது. இங்கு உருவங்களை கோட்டோவியங்களாக வரைந்த பின்னர் உட்புறம் வெள்ளை வண்ணத்தால் நிரப்பியுள்ளனர். இவ்வோவியத்திற்கு மேலே வீரன் ஒருவன் கையில் இரும்பு வாளுடன் மற்றும் இடுப்பில் குறு வாளுடன் காட்டப்பட்டுள்ளான். குதிரை ஓவியத்துக்கு கீழே மாட்டின் உருவம் வரையப்பட்டுள்ளது.  இங்கு நடை பெற்ற அகழ்வாராய்ச்சியில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த  தொல்குடிகள் பயன்படுத்திய  பொருட்கள்  அதிக அளவிலும், குறைந்த அளவில் புதிய கற்கால பானை ஓடுகளும் கிடைத்தன. இங்கு கிடைத்தவற்றில் கருப்பு  - சிவப்பு பானை ஓடுகள், கருப்பு பானை, சிவப்பு பானை மற்றும் சாம்பல் வண்ண பானைகள் குறிப்பிடத்தக்கவைகளாகும்.  இவ்வோவியங்கள் பெருங்கற்காலத்தில் சுமார் கி.மு. 500 – கி.பி 300 வரையிலான காலகட்டங்களில் வரைந்திருக்ககூடும் என தமிழகத் தொல்லியல் துறையினர் கணிக்கின்றனர்.

ஒளிப்படம்எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்

தமிழகத்தில் முதன் முறையாக மல்லபாடியில் பாறை ஓவியங்களைக் கண்டறிந்தனர். இதற்கு பின்னர் பல இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், கிருஷ்ணகிரி பகுதியில் எண்ணற்ற வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் சின்னங்கள் உள்ளன. இவ்வோவியங்கள் பெருங்கற்கால வாழ்வினை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.

குறிப்புதவிகள்
குதிரையின் மீதேறி இருவர் ஆயுதத்தால் தாக்கிக்கொள்வது, மற்றொரு வீரன்கையில் ஆயுத்த்துடன், மிருகம் ஒன்று
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_PNT_00037_மல்லப்ப...

  • TVA_PNT_00037_மல்லப்ப...

  • TVA_PNT_00037_மல்லப்ப...

  • TVA_PNT_00037_மல்லப்ப...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 25 Jul 2017
பார்வைகள் 209
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய ஓவியம்