மனித உருவங்கள் விலங்கு உருவங்கள், வீரர்கள் குதிரையின் மீது கையில் ஆயுதத்துடன்
| ஓவியம் இருப்பிடம் | # |
|---|---|
| ஊர் | எரசக்கநாயக்கனூர் |
| வட்டம் | சின்னமனூர் |
| மாவட்டம் | தேனி |
| ஓவியத்தின் பெயர் | மனித உருவங்கள் விலங்கு உருவங்கள், வீரர்கள் குதிரையின் மீது கையில் ஆயுதத்துடன் |
| ஓவியத்தின் அமைவிடம் | # |
| ஓவியத்தின்வகை | பாறை ஓவியங்கள் |
|
விளக்கம்
தேனி மாவட்டத்தில் சின்னமனூர் வட்டாரத்தில் அமைந்துள்ள ஊர் எரசக்கநாயக்கனூர். இவ்வூரின் தெற்கே உள்ள மலைக் குன்றில், சுனை நீர் குட்டை உள்ளது. இதனருகே வெள்ளை வண்ணத்தில் கோட்டோவியங்கள் காணப்படுகிறது. இவற்றில் பல அழிந்த நிலையில் உள்ளது. இங்கு மனித உருவங்களும் விலங்கு உருவங்களும் தனித்தனியாகவும் சேர்ந்தும் காணப்படுகிறது. இங்குள்ள சில ஓவியங்களில் வீரர்கள் குதிரையின் மீதேறி கையில் ஆயுதத்துடன் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. பொதுவாக பாறை ஓவியங்கள் பிறர் பார்க்கும் வகையில் உள்ள இடங்களிலேயே வரையப்படும். அதுபோல இங்குள்ள நீர்சுனையை பயன்படுத்த வருபவர்களை கருத்தில் கொண்டு ஓவியம் வரையப்பட்டுள்ளது. இவை தோற்றத்தில் அடிப்படையில் பெருங்கற்கால ஓவியங்களின் சாயலில் உள்ளது |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| குறிச்சொற்கள் | |
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Oct 2022 |
| பார்வைகள் | 114 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |