Back
ஓவியம்
மான் ஒன்றும் இரு மனித உருவங்களும்
ஓவியம் இருப்பிடம் #
ஊர் குறிஞ்சிநகர்
வட்டம் உசிலம்பட்டி
மாவட்டம் மதுரை
ஓவியத்தின் பெயர் மான் ஒன்றும் இரு மனித உருவங்களும்
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை பாறை ஓவியங்கள்
விளக்கம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரையிலிருந்து கொச்சி செல்லும் சாலைக்கு தெற்கே உள்ள மலைத்தொடரில் உள்ள செம்பாறை பொடவு என்ற குகைத்தளத்தில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றதுஇப்பொடவு சமதளத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதுஇங்கு வெள்ளை வண்ணத்தில் மான் ஒன்றும் இரு மனித உருவங்களும் காட்டப்பட்டுள்ளதுஇங்குள்ள மனித உருவங்களில் ஒன்று உருவில் பெரியதாகவும் மற்றொன்று சிறியதாகவும்  தலைப்பாகையுடன் வரையப்பட்டுள்ளது.. இவர்கள் தந்தையும் மகனுமாக இருக்கக்கூடும்.

பொதுவாக வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்களில் மிருகங்களை வேட்டையாடும் காட்சிகளையே வரைந்திருப்பார்ஆனால் இங்கு மானுக்கு எதிரே உள்ள மனித உருவங்கள் கையில் ஆயுதங்கள் ஏதுமின்றி கையை விரித்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. அதுபோல அந்த மானும் இவர்கள் முன்னால் எந்தவித பயமின்றி எதிர்கொள்வது போல் உள்ளது. அக்காலத்தில் மிருகங்களை வேட்டையாடுவது மட்டுமன்றி சில சமயங்களில் சிலர் அம்மிருகங்களுடன் நெருங்கிய நட்பிலும் இருப்பதுண்டுஇதுபோன்ற மனித-விலங்குகளின் உறவுகளையும், ஓரிடத்தில் இணைந்து வாழ்வதையும் காட்டுவதாக இந்த ஓவியம் அமைந்துள்ளதுஇவ்வோவியங்கள் புதிய கற்காலத்திற்கும் பெருங்கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வரைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஒளிப்படம்எடுத்தவர் க.த. காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொற்கள்
மான் ஒன்றும் இரு மனித உருவங்களும்
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_PNT_00058_உசிலம்ப...

  • TVA_PNT_00058_உசிலம்ப...

  • TVA_PNT_00058_உசிலம்ப...

  • TVA_PNT_00058_உசிலம்ப...

  • TVA_PNT_00058_உசிலம்ப...

  • TVA_PNT_00058_உசிலம்ப...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 17 Oct 2022
பார்வைகள் 136
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 6

தொடர்புடைய ஓவியம்