கல்லம்பாளையம்
கல்லம்பாளையம்
| ஓவியம் இருப்பிடம் | # |
|---|---|
| ஊர் | கல்லம்பாளையம் |
| வட்டம் | கோத்தகிரி |
| மாவட்டம் | நீலகிரி |
| ஓவியத்தின் பெயர் | கல்லம்பாளையம் |
| ஓவியத்தின் அமைவிடம் | # |
| ஓவியத்தின்வகை | பாறை ஓவியங்கள் |
|
விளக்கம்
கல்லம்பாளையும் ஊருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் கல்திட்டைகள் பரவலாக காணப்படுகின்றது. அவற்றில் பல சேதமடைந்தாலும் நல்ல நிலையில் சில கல்திட்டைகள் காணப்படுகின்றன. அங்குள்ள கல்திட்டை ஒன்றில் கற்கீறல் சுமார் 3 அடி அளவில் செதுக்கப்பட்டுள்ளது. அதில் பெரிய வட்டம் செதுக்கப்பட்டு அதற்குள்ளே மையப்பகுதியில் ஒரு வட்டமும் அதைச் சுற்றி 8 வட்டங்களும் செதுக்கப்பட்டுள்ளன. அவ்வட்டத்துக்குள் சக்கரத்தில் இருப்பது போல ஆரங்கள் காட்டப்பட்டுள்ளது. வெளி வட்டத்துக்கு இரண்டு புறமும் இறகு போன்ற செதுக்குகள் காணப்படுகின்றது. இங்கு காணப்படும் கற்செதுக்குகள் பிரபஞ்ச அமைப்பை காட்டுவதாக தெரிகிறது. ஒவ்வொரு வட்டமும் கோள்களென கருதலாம். வட்டத்துக்குள் காட்டப்படும் சக்கரங்கள், கோள்கள் இயங்குவதை குறிப்பதாக கருத இடமுண்டு. ஆகையால், சூரியனையும் அதைச் சுற்றியுள்ள 8 கோள்களையும் காட்டுவதாக தெரிகிறது. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
தமிழகத்தில் பெரும்பாலும் பாறை ஓவியங்களே அதிகம் இருக்கும் நிலையில், பாறை கற்கீறல்கள் 4 இடங்களில் மட்டுமே கிடைக்கின்றது. அதில் முதன் முறையாக கல்திட்டைகளில் கற்கீறல்கள் இங்கு கிடைக்கின்றது. மனித, விலங்கு உருவங்களைத் தவிர்த்து வடிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி கற்கீறல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வோவியம் சங்க காலத்தில் குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களில் கலை, விஞ்ஞானம் மற்றும் அழகியலை வெளிப்படுத்தும் வண்ணமாக உள்ளது. |
|
|
குறிப்புதவிகள்
|
|
கல்லம்பாளையம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
4 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 10 May 2017 |
| பார்வைகள் | 112 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 4 |