ஓவியம்
இராமாயணம்
ஓவியம் இருப்பிடம் #
ஊர் இராமநாதபுரம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
ஓவியத்தின் பெயர் இராமாயணம்
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை சுவரோவியம்
விளக்கம்

          சேதுபதி மன்னர்கள் இராமேசுவரத்தில் உள்ள சிவபெருமான் மேல் அதீத பக்தி கொண்டவர்கள். அதன் பொருட்டு தாங்கள் உருவாக்கிய பிரமாண்டமான அரண்மனைக்கு “இராமலிங்க விலாசம்” என்று பெயர் சூட்டினர். தமிழகத்தில் எண்ணற்ற அரண்மனைகள் கட்டப்பட்டிருந்தன போர் மற்றும் பிற காரணங்களால் பல முற்றிலும் அழிந்து விட்டன. இன்று தமிழகத்தில் காணப்படும் ஒரு சில அரண்மனைகளில் நல்ல நிலையில் உள்ள அரண்மனைகளில் இவ்வரண்மனை குறிப்பிட்த்தக்கது. மேலும் மற்ற அரண்மனைகளில் இல்லாத அளவிற்கு எழில் மிகு ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

          கோயில் கட்டுமானத்தைப் போல கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்று மூன்று மண்டபங்களுடன் கிழவன் சேதுபதியால் சுண்ணாம்பு, செங்கல், கருங்கல் கொண்டு கி.பி. 1690 – 1710 வாக்கில் கட்டப்பட்டது.

          இங்குள்ள ஓவியங்கள் சேதுபதி மன்னர்களின் ஆன்மீகப்பற்றையும், அகவாழ்க்கையையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

          இங்குள்ள ஓவியங்களில் இராமாயண, பாகவதக்காட்சிகள், சேதுபதி மன்னர்களின் அரசியல் தொடர்பான காட்சிகள், அன்றாட நடைமுறைகள், பொழுதுபோக்குகள் மற்றும் அவர்களது அந்தப்புற வாழ்வினை விளக்கும்  காட்சிகள், முக்கியமான வழிபாட்டுத் தளங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

          இங்குள்ள ஓவியங்கள் யாவும் முத்துவிஜயரெகுநாத சேதுபதி காலத்தில் (கி.பி. 1713-1725) வரையப்பட்டன மேலும்  இவரது உருவங்கள் ஓவியங்களாக சில இடங்களில் உள்ளன.

          முகமண்டபத்துச் சுவற்றில் சேதுபதிகள் தஞ்சை மராத்தியர்களுடன் செய்த போர், மைசூர் மூக்கறுப்பு போர், ஆங்கிலேய வர்த்தகர்களுடன் பேசுவது, கிறித்துவ பாதிரியார் மாண்டிஸ் அவர்களின் வருகை போன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் மூலம் அக்காலகட்டங்களில் நடந்த போர் முறை மற்றும் போர் கருவிகள் பற்றிய விவரங்கள் தெரிய வருகிறது. மேலும் சைவ, வைணவ கடவுள்களின் திருவுருவங்களும் தீட்டப்பட்டுள்ளன.

பாகவத புராணக் காட்சிகள், முக மண்டபத்துக்கு அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் வரையப்பட்டுள்ளது. அதில் கண்ணனுடைய லீலைகளை  நீண்ட காட்சித் தொடராக வரைந்து விளக்கம் எழுதப்பட்டுள்ளது.

            உள் மண்டப சுவர்களில் இராமயணக் காட்சிகள் உரிய விளக்கங்களுடன் மிக விளக்கமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இராமனின் பிறப்பு, விசுவாமித்திரரின் வருகை, அகலிகை சாபவிமோசனம், வில் ஒடித்தல், இராம, லட்சுமண, பரதன் மற்றும் சத்ருக்கணனின் திருமணங்கள் போன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன.

            அரண்மனையின் முதல் மாடியில் அரசனின் அந்தப்புர வாழ்க்கையும், இசை மற்றும் நடனம் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளும், அரசனின் அன்றாட வாழ்க்கை முறையும் விளக்கமாகவும் நேர்த்தியாகவும் காட்டப்பட்டுள்ளன. மேலும் சேதுபதி மன்னர் இராஜராஜேஸ்வரி அம்மனிடம் செங்கோல் பெறுவது, சேதுபதிக்கு இரத்தின பட்டாபிஷெகம் செய்வது போன்ற காட்சிகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

           இங்குள்ள ஓவியங்களுக்கு கீழே அல்லது மேலே கருப்பு வண்ணம் பூசப்பட்டு அதில் வெள்ளை வண்ணத்தால் காட்சிக்குரிய விளக்கங்கள் பெரும்பாலும் தமிழிலேயே எழுதப்பட்டுள்ளது. இருப்பினும் தெலுங்கு  எழுத்துக்களும் ஆங்காங்கே காணப்படுகின்றது.  இவ்வெழுத்துக்களில், வட்டார வழக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் இவ்வெழுத்துக்களில் புள்ளிகள் பயன்படுத்தப்படவில்லை.

          இங்குள்ள ஓவியங்கள் யாவும் ஒரே சமயத்தில் முத்து விஜய ரகுநாத சேதுபதியின் காலத்தில் (கி.பி. 1706 –1730) வரையப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அதற்கு சாட்சியாக, இவரது சமகாலத்தைச் சார்ந்த முத்து விஜயரங்க சொக்கநாத நாயக்கர் முத்து விஜய ரகுநாத சேதுபதிக்கு இரத்தின பட்டாபிஷேகம் நடத்தும் காட்சி வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியத்துக்கு கீழே இதன் விவரம் எழுதப்பட்டுள்ளது. மேலும், சேதுபதி, தஞ்சை மராட்டியர்களுக்குமிடையே கி.பி.1700 – 1710 வாக்கில்  நடந்த  போர் காட்சிகளும் காணப்படுவதால், இவ்வோவியங்கள் யாவும் 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வரையப்பட்டிருக்கலாம் என அறிய முடிகிறது.

          இங்குள்ள ஓவியங்களில், சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு, வெள்ளை போன்ற வண்ணங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சில ஓவியங்கள் தனித்தனியாகவும், சில தொடர் காட்சிகளாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. தொடர் காட்சிகளில் ஓவியத்துக்கான காட்சி விளக்கம் பெரும்பாலும் தமிழில் உள்ளது. சில இடங்களில் தெலுங்கில் உள்ளது. இங்குள்ள ஓவியங்களில் எண்ணற்ற ஆபரணங்களும், வேலைப்பாடு அதிகம் உள்ள உடைகளும் காட்டப்பட்டுள்ளன. மேலும் இவை சமூக படி நிலைக்கேற்ப பயன்பாட்டில் இருந்துள்ளது என இவ்வோவியங்கள் மூலம் தெரியவருகிறது. அதுபோல, சேதுபதி மன்னர்கள், இறைத் தொண்டு மட்டுமல்லாமல் பல்வேறு கலையினையும், கலைஞர்களையும் ஆதரித்துள்ளனர் என்பதற்கு இங்குள்ள ஓவியங்களே சாட்சியாக உள்ளன.

ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொற்கள்
சுருக்கம்

          தென் தமிழ்நாட்டில் காணப்பெறும் புகழ்வாய்ந்த அரண்மனைகளில் ஒன்றாகத் திகழும் இராமலிங்க விலாசம் அரண்மனை சேதுபதி மன்னர்களின் கலைக்கொடையாகும். இராமபிரானால் வழிபடப்பட்ட சிவத்தலம் என்று போற்றப்படும் இராமேச்வரத்துக்குப் பயணம் செய்யும் பக்தர்களுக்குப் பழங்காலத்தில் தற்பொழுது உள்ளதைப் போல் அச்சமின்றி பயணம் செய்யும் வசதிகள் கிடையா. இராமேச்வரம் செல்லும் பயணிகள் மண்டபம் வரை மாட்டு வண்டி அல்லது நடை பயணமாகச் சென்று, அங்கிருந்து இராமேச்வரத்தைப் படகின் மூலம் சென்றடைவார்கள். அவ்வாறு மேற்கொள்ளும் பயணத்தின்போது ஏற்படும் வழிப்பறி போன்ற இடையூறுகளை வழிப்பறிக்கு ஆளான பக்தர்கள் மதுரை நாயக்கர்களிடம் சென்று முறையிடுவது வாடிக்கையாக நடைபெற்று வந்தது. இக்குறையை நீக்கும் பொருட்டு மறவர் நாட்டின் வீரராகத் திகழ்ந்த சடைக்கத் தேவர் என்ற உடையார் சேதுபதியை இராமேச்வரம் பகுதிக்கு மதுரையை ஆட்சி செய்த முத்துக்கிருட்டிணப்ப நாயக்கர் என்பவர் சிற்றரசராக கி.பி. 1605-இல் நியமனம் செய்து சேதுவையும் (இராமேச்வரம்) இராமேச்வரம் செல்லும் பயணிகளையும் காக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அதுமுதல் ஏறத்தாழ 100 ஆண்டுகள் சேதுபதிகள் போகலூர் என்ற ஊரைத் தலைநகரமாகக் கொண்டு சேது நாட்டை ஆட்சி செய்து வந்தனர்.

          கி.பி.1700 வாக்கில் சேதுபதிகளிலேயே திறமை மிக்கவரும் நீண்ட காலம் ஆட்சி செய்தவருமான கிழவன் சேதுபதி தனது தலைநகரைப் போகலூரிலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றி இப்பெரும் மாளிகையைக் கட்டினார்.  அதில் தலையாய இடமான அரசவை நடக்கும் இடத்திற்கு, தானும் தனது மன்னோரும் வழிபட்டுவரும், இராமேச்வரம் உறையும் இறைவனது பெயரைக் குறிக்கும் வகையில்  இராமலிங்க விலாசம் எனப் பெயரிட்டு அழைத்தார்.  இவ்வரண்மனையின் தலைவாயிலாகத் தற்பொழுது காட்சி அளிக்கும் நுழைவாயில் இராஜா பாஸ்கர சேதுபதி (1873 – 1903) அவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.

ஒவியங்கள் - வரலாற்று நிகழ்ச்சிகள்

          கிழவன் சேதுபதிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மைந்தர் விசய ரகுநாத சேதுபதி இவ்வரண்மனையைக் காண்போர் வியக்கும் வண்ணம் அழகிய ஓவியங்களைத் தீட்டி அழகுக்கு அழகு சேர்த்தார். இவ்வழகிய சுவர் ஓவியங்களே இவ்வரண்மனையின் சிறப்பை உயர்த்துவதாகும்.

          இவ்வரண்மனை ஒவியங்களை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முகமண்டபப் பகுதியிலுள்ள சுவர் ஓவியங்கள் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கவை. அவ்வோவியங்கள் சேதுபதியின் வாழ்க்கையில் நடந்த மராத்தியப் போர், மைசூர் மூக்கறுப்புப் போர், ஆங்கிலேயர் வியாபார நிமித்தமாகச் சேதுபதியைக் காணுதல் மற்றும் கிறித்துவ பாதிரியார் மாண்டிஸ் அவர்களின் வருகை ஆகிய நிகழ்ச்சிகளை விளக்குகின்றன.

          இராமலிங்க விலாசம் சுவர் ஓவியங்களில் உள்ள போர்க் காட்சிகள் மூலம் 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய ஆயுதங்களைக் கொண்டு எப்படி போர் செய்தனர் என்பதை அறிய முடிகிறது. பீரங்கிகள், துப்பாக்கிகள் போன்றவைகள் பயன் படுத்தப்பட்ட விதத்தைக் கண்டுணர முடிகிறது. அவ்வாறு ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போலவே நமது அகழ்வைப்பகத்திற்கு ஒரு பீரங்கி சேகரிக்கப்பட்டு அவ்வோவியத்தின் அருகிலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இங்கு ஒவியத்தையும், உண்மையையும் நம்மால் ஒப்பு நோக்க முடியும்.

          இவ்வோவியத்திற்கு அருகிலேயே தமிழக நெறியில் நடைபெறும் போர்க் காட்சி ஒன்றும் தீட்டப்பட்டுள்ளது. வீரர்கள் வேல், கத்தி, கேடயம் போன்ற ஆயுதங்களையே பயன்படுத்துகின்றனர். இவ்விரு ஓவியங்களும் அருகருகே தீட்டப்பெற்றிருப்பதால், நாம் ஐரோப்பிய, தமிழகப் போர்க் கருவிகளை ஒப்பிட்டு அறியவும், அன்று  இரு முறையிலும் போர்கள் நடந்தன என்பதையறியவும் முடிகின்றது. .

சமயச் சார்பான ஒவியங்கள்

          அதனையடுத்து சைவ சமயக் காட்சிகள் உள்ளன.  இச்சுவருக்கு நேர் எதிர்புறம் வைணவத் தெய்வங்களின் திருவுருவங்களும், திருமாலின் அவதாரங்களும் வரையப்பட்டுள்ளன. சைவத்தையும் வைணவத்தையும் சேதுபதிகள் சமமாகப் பேணினர் என்பதற்கு இச்சுவர் ஒவியங்கள் நல்ல சான்றாகும்.

பாகவத  இராமாயணக் காட்சிகள்

          முகமண்டபத்தினை அடுத்துள்ள சிறிய மண்டபப் பகுதியில் கண்ணனுடைய லீலைகளும் அவனது குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளும் வரையப்பட்டுள்ளன. உள்மண்டபத்தின் சுவர்களில் இராமாயணக் காட்சிகள் காணப்படுகின்றன. உள்மண்டபத்தின் விதானத்தில் மீண்டும் சேதுபதிகளின் வாழ்க்கை நடைமுறைகள் அழகுறத் தீட்டப்பட்டுள்ளன. இக்காட்சிகளில் உள்ள இராமர், வில்வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம் முதலியவற்றைப் பயிலும் காட்சி சிறுவர்களும் கண்டு ரசிக்கும் வண்ணம் அழகாகத் தீட்டப் பட்டுள்ளது.

சேதுபதியின் குடும்ப வாழ்க்கை

          இவ்வரண்மனையின் முதல் மாடியில் சேதுபதி மன்னர் அரசியுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் தமது ஓய்வுப் பொழுதை எப்படிக் கழித்தார் என்பதை விளக்கும் சித்திரங்கள் எழுதப்பட்டுள்ளன.

          இவ்வோவியத்தில் பெண்களின் உருவங்களினாலேயே ஒர் யானையைப் போலவும் அதன் மீது அரசர் அமர்ந்து கரும்பு வில்லால் மலர்க்கணையினை அரசியை நோக்கித் தொடுப்பது போலவும், அதன் எதிரே பெண்களின் உருவங்களினாலேயே அமைந்த குதிரை உருவம் வரையப்பட்டு அதன் மீது அரசி அமர்ந்து அரசர் மீது மலர்க் கணை தொடுப்பது போலவும் உள்ள ஓவியம் எத்துணை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அழகாக வரையப்பட்டுள்ளது.

           அரசர் மது அருந்துவது போலவும், அவரைச் சுற்றி பல்வேறு வடிவங்களில் மதுப்புட்டிகளும், மது அருந்தும் கோப்பைகளும் தீட்டப்பட்டுள்ளன. இவை அந்நாளில் எத்தனை வகையான மதுப்புட்டிகளும் கோப்பைகளும் இருந்தன என்பதை நமக்குப் புலப்படுத்துகின்றன.

          இவ்வோவியங்களில் உள்ள கழுத்தணிகள், காதணிகள், பெண்களின் கொண்டையை அலங்கரிக்கும் அணிமணிகள், எத்தனை, எத்தனை வகையான அணிகலன்கள் என பகுத்து அறிய முடியாத அளவில் உள்ளன. அன்றைய இசைக்கருவிகளும், இசைக்கும் முறைகளும்கூட நம்மால் இவ்வோவியங்களிலிருந்து அறிய முடிகிறது.

மன்னர் மகளிருடன் நீராடல்

          மன்னர் அந்தப்புர பெண்களுடன் நீரில் விளையாடும் காட்சி உயிரோவியமாக இங்கு வரையப்பட்டுள்ளது,

ஆடைச் சிறப்பு

          இவ்வோவியங்களில் வரையப்பட்டுள்ள ஆடைகளின் சிறப்பு கண்டு ஆராயத்தக்கது.  மன்னர் இசுலாமியப்பாணியிலும், தமிழகப் பாணியிலுமாக உடைகள் அணிந்திருப்பது, இசுலாமியத்தின் தாக்கத்தை நமக்கு எடுத்து இயம்புகின்றது. குறிப்பாக இவ்வோவியங்களில் உள்ள சேலைகள் குறிப்பிடத்தக்கவை. மூன்று நூற்றாண்டு களுக்குப் பிறகும் இன்றும் துணிகளில் இராமநாதபுரச் சுவர் ஓவியங்களில் காணப்பெறும் வடிவங்களையே (Designs) 'தங்களின் புதிய தயாரிப்பு’ எனச் சேலைகளை தயாரித்து வெளியிடுகின்றனர் என்றால் அவ்வோவியங்களின் மாட்சியை எவ்வாறு வருணிப்பது? அன்றைய இசைக் கருவிகளையும், இசைக்கும் முறைகளையும் கூட இவ்வோவியங்களில் இருந்து நம்மால் அறிய முடியும். சுமார் 275 ஆண்டுகளுக்கு முன்பு தீட்டப்பட்ட அவ்வோவியங்கள், இன்று வரையப்பட்டவைபோல் காட்சி தரும் சிறப்பை எண்ணியெண்ணி வியக்கவேண்டியுள்ளது.

ஓவியச் சிறப்பு

          வட இந்தியாவில் இமயமலைச் சாரற் பகுதிகளிலும், இராஜஸ்தானம், பஞ்சாப், கொல்லூர், கோட்டா மற்றும் கார்வால், பசாரி ஆகிய இடங்களிலும் உள்ள ஒவியங் களோடு இராமநாதபுரம் ஓவியங்களும் ஒப்பிடக்கூடிய அளவிலுள்ளன. தமிழ்நாட்டில் மற்ற இடங்களில் கிடைக்கும் ஒவியங்கள் சமயத் தொடர்பு உடையவை. ஆனால் இராமநாதபுரம் ஓவியங்கள் சமுதாயச் சூழல் களைச் சித்தரிக்கும் ஒவியங்களாகச் சிறப்புற்றுத் திகழ் கின்றன.

குறிப்புதவிகள்
இராமாயணம்
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    150 Files

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

  • TVA_PNT_00017_இராமநாத...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 17 May 2017
பார்வைகள் 296
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 290

தொடர்புடைய ஓவியம்