மனித உருவம், விலங்கு, வட்ட வடிவம், வட்டத்துக்குள் வட்டம்
| ஓவியம் இருப்பிடம் | # |
|---|---|
| ஊர் | திருவாதவூர் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| ஓவியத்தின் பெயர் | மனித உருவம், விலங்கு, வட்ட வடிவம், வட்டத்துக்குள் வட்டம் |
| ஓவியத்தின் அமைவிடம் | # |
| ஓவியத்தின்வகை | பாறை ஓவியங்கள் |
|
விளக்கம்
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் திருவாதவூர் உள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள மலைக்குகையில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டுகளும், கற்படுக்கைகளும் செதுக்கப்பட்டுள்ளன. இதற்கு அருகேயுள்ள பாறையில் ஓவிங்கள் சிவப்பு வண்ணத்தில் காணப்படுகின்றன. இங்கு மனித, விலங்கு உருவங்கள் அல்லாமல், வட்ட வடிவங்கள் ஆங்காங்கே வரையப்பட்டுள்ளது. இந்த வரைவுகள் வட்டத்துக்குள் வட்டங்களாக மிக நேர்த்தியான அளவுகள் மற்றும் வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் அக்காலக்கட்ட ஓவியர்கள், வடிவியல் வடிவங்கள் (Geometrical shapes) குறித்து நன்கு அறிந்து அதனை மிக நேர்த்தியாக வெளிப்படித்தியுள்ளனர் எனத் தெரியவருகிறது, இவை ஏதேனும் தகவல் தெரிவிக்கும் விதமான குறியீடுகளாகவோ அல்லது அலங்கார வரைவுகளாகவோ இருக்கக்கூடும். இவ்வோவியங்கள் புதிய கற்கால ஓவியர்களால் வரைந்திருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| குறிச்சொற்கள் | |
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Oct 2022 |
| பார்வைகள் | 142 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 2 |