மீன், மனித உருவம், கட்டங்கள், குறியீடுகள்
| ஓவியம் இருப்பிடம் | # |
|---|---|
| ஊர் | ஒதியத்தூர் |
| வட்டம் | முகையூர் |
| மாவட்டம் | விழுப்புரம் |
| ஓவியத்தின் பெயர் | மீன், மனித உருவம், கட்டங்கள், குறியீடுகள் |
| ஓவியத்தின் அமைவிடம் | # |
| ஓவியத்தின்வகை | பாறை ஓவியங்கள் |
|
விளக்கம்
விழுப்புரத்திலிருந்து சுமார் 18 கிமீ தொலைவில் கண்டாச்சிபுரம் செல்லும் சாலையில் கீழ்வாலையிலிருந்து சுமார் 4 கிமீ. தொலைவில் அமைந்துள்ள கிராமம் ஒதியத்தூர், வயல் வெளிகளால் சூழப்பட்ட இக்கிராமத்தில் ஆங்காங்கே மலைக் குன்றுகள் காணப்படுகின்றன, அவற்றில் ஒன்று தேன் பாறைக் குன்று. இக்குன்று தரையிலிருந்து சுமார் 150 அடி உயரத்தில் உள்ளது. இக்குன்றின் உச்சிப்பகுதியில் சிறிய பாறை ஒதுக்கு உள்ளது. இது தற்காலிகமாக மழை / வெயில் உள்ள சமயங்களில் ஒதுங்க போதுமான ஒன்றாகும். இங்குள்ள பாறை ஒன்றில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் சிவப்பு வண்ணத்தில் உள்ளன. இவற்றில் பெரும்பாலனவை அழிந்த நிலையில் உள்ளன. இங்கு மனித உருவம், மீன் மற்றும் அடையாளம் காண இயலாத வரிவடிவங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள ஓவியங்களில் உருவங்களின் உட்பகுதி சிறு சிறு தொடர் கோடுகளால் நிரப்பப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன. மீன் உருவம் பெரிய அளவில் கோட்டோவியமாக வரையப்பட்டு ஓவியத்தின் உட்பகுதி வண்ணங்களால் ஆங்காங்கே தீட்டப்பட்டுள்ளது. அது போல சதுர, செவ்வக கட்டங்களும் காணப்படுகின்றது. ஓவியங்கள் சில இடங்களில் ஒன்றன் மீது ஒன்றாக வரையப்பட்டுள்ளது. இவ்வோவியங்கள் மீன் பிடித்தலையும், அதற்கான கருவி, நீர் நிலைகளயே காட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கம் பெருங்கற்காலத்திலும் இருப்பினும் இங்குள்ள வண்ணம் மற்றும் தீட்டும் முறையில் காணும் போது இவை புதிய கற்காலத்துக்கும், பெருங்கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலங்களில் வரையப்பட்டிருக்கக் கூடும். மேலும், இவ்வோவியங்களில் சில அருகே உள்ள கீழ்வாலை, ஆலம்பாடி மற்றும் செத்தவரையில் உள்ள பாறை ஓவியங்களை ஒத்தத் தன்மையில் உள்ளன. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் | |
|
குறிப்புதவிகள்
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 26 Jul 2017 |
| பார்வைகள் | 230 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |