மனித உருவங்கள், விலங்கு உருவங்கள், புள்ளிகள், கோடுகள், கையில் வில்லுடன் மனிதன்
| ஓவியம் இருப்பிடம் | # |
|---|---|
| ஊர் | புத்தூர் மலை |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| ஓவியத்தின் பெயர் | மனித உருவங்கள், விலங்கு உருவங்கள், புள்ளிகள், கோடுகள், கையில் வில்லுடன் மனிதன் |
| ஓவியத்தின் அமைவிடம் | # |
| ஓவியத்தின்வகை | பாறை ஓவியங்கள் |
|
விளக்கம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் புத்தூர் மலை அமைந்துள்ளது. இம்மலையின் மேற்கு பக்கத்தில் வாழ்விடத்திற்கு ஏற்ற குகைத்தலம் உள்ளது. இங்கு ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சமண சிற்பங்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. அது போல வெள்ளை வண்ணத்தில் பாறை ஓவியங்களும்77 பரவலாக குகையின் கூரைப்பகுதிகளில் வரையப்பட்டுள்ளன. இங்கு மனித உருவங்கள், விலங்கு உருவங்கள் மற்றும் பல குறியீடுகள் காணப்படுகின்றன. ஓவியங்கள் பெரும்பாலும் கோட்டோவியங்களாகவே உள்ளன. இங்குள்ள ஓவியங்களில் வேடன் ஒருவன் கையில் வில்லுடன் நடந்து செல்வது மற்றும் மனித உருவங்கள் வெவ்வேறு செயல்பாடுகளில் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. இங்குள்ள குறியீட்டு ஓவியங்கள் சில தகவல்களை பரிமாறும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு கோடுகளுடன் புள்ளியையும் சேர்த்து சில ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஓவியங்களில் தொன்மையானவை பெருங்கற்காலத்தை சேர்ந்ததாக இருக்கக்கூடும். இருப்பினும் தொடர்ந்து சமீபகாலம் வரை ஓவியங்கள் வரையப்பட்டு வந்துள்ளது. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| குறிச்சொற்கள் | |
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
13 Files
-
TVA_PNT_00060_புத்தூர...
-
TVA_PNT_00060_புத்தூர...
-
TVA_PNT_00060_புத்தூர...
-
TVA_PNT_00060_புத்தூர...
-
TVA_PNT_00060_புத்தூர...
-
TVA_PNT_00060_புத்தூர...
-
TVA_PNT_00060_புத்தூர...
-
TVA_PNT_00060_புத்தூர...
-
TVA_PNT_00060_புத்தூர...
-
TVA_PNT_00060_புத்தூர...
-
TVA_PNT_00060_புத்தூர...
-
TVA_PNT_00060_புத்தூர...
-
TVA_PNT_00060_புத்தூர...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Oct 2022 |
| பார்வைகள் | 143 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |