Back
ஓவியம்
வீடு, வேட்டைக்காட்சி, வட்டங்கள், குழு நடனம், மனிதர் மற்றும் விலங்குகளின் கை அச்சு
ஓவியம் இருப்பிடம் #
ஊர் மகராஜகடை
வட்டம் கிருஷ்ணகிரி
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஓவியத்தின் பெயர் வீடு, வேட்டைக்காட்சி, வட்டங்கள், குழு நடனம், மனிதர் மற்றும் விலங்குகளின் கை அச்சு
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை பாறை ஓவியங்கள்
விளக்கம்

          மகாராஜகடை எனும் கிராமம் கிருஷ்ணகிரி – குப்பம் சாலையில், கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள பூதிகன் மலைக்குன்றில் மேல் உள்ள பாண்டுவுரார் பாறை என்னும் இடத்தில் பெருங்கற்காலக் கற்பதுக்கைகள்  கண்டுபிடிக்கப்பட்டன. இக்கிராமத்தில் இருந்து கற்பதுக்கை உள்ள இடத்துக்குச் செல்ல சுமார்  3.5 கி.மீ வனப்பகுதிக்குள் பயணிக்க வேண்டும். பெரும்பாலான கற்திட்டைகள் மனித மற்றும் இயற்கையின் பேரழிவுக்கு உட்படாமல் நல்ல நிலையிலே உள்ளன. இங்கு மூன்று விதமான கற்பதுக்கைகள் காணப்படுகின்றன.  பெரும்பாலான கற்திட்டைகளில் கிழக்கு பக்கத்தில் இருக்கும் கல்லில் மட்டும் ஓட்டை போட்டுள்ளனர். மேலும் கற்திட்டைகளைச் சுற்றி ஒன்று அல்லது இரண்டு கல் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஓவியங்கள் இங்குள்ள கற்பதுக்கைகளின் உட்புறத்தில் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன.

         அதே போல பல இடங்களில் பழைய ஓவியங்கள் மீது தற்கால ஓவியங்களும், கிறுக்கல்களும் அதிகம் காணப்படுகின்றன.  அகையால் சில பழைய ஓவியங்களை அடையாளப்படுத்துவதில் சிரமம் இருக்கின்றது. பெரும்பாலான ஓவியங்களில் விலங்குகளோடு மனித உருவம் சேர்ந்து காட்டப்பட்டுள்ளது. அதுபோல கற்திட்டையின் இடு துளைக்கு எதிர் புறம் உள்ள மேற்கு பக்கத்தில் உள்ள சுவர்களிலே மட்டுமே ஓவியங்கள் அதிகம் வரையப்பட்டுள்ளது. மேலும், கற்திட்டைகளில் விலங்குகளை வேட்டையாடுதல், மதம் பிடித்த வன விலங்குகளை அடக்குதல், வில், அம்பு மற்றும் வாளுடன் மனித உருவங்கள், நடனக் காட்சிகள், மற்றும் குறியீடுகள் போன்றவை வரைந்திருப்பது  குறிப்பிடத்தக்கவைகளாகும். மற்றொரு கற்திட்டையில், வீடு, வேட்டைக்காட்சி, வட்டங்கள், குழு நடனம், மனிதர் மற்றும் விலங்குகளின் கை அச்சு உள்ளன. விலங்குகளை போக்குவரத்துக்கும், வேட்டைக்கும் பயன்படுத்தியது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் மனித உருவங்கள் ஆயுதங்களுடனும், ஆயுதமற்றும், விலங்கு மீது அமர்ந்த படியும், நேருக்கு நேர் சண்டை புரிவது என காணக்கிடைக்கின்றது. வட்டமானது சூரியனை குறிக்கும் விதமாக உள்ளது. கதவு மற்றும் சுவர்களில் கை அச்சு பதிக்கும் வழக்கம் தொன்று தொட்டு இன்றும் தமிழக கிராமப்பகுதிகளில் இருந்து வருவதேயாகும். அவ்வழக்கம் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்துள்ளதை இவ்வோவியங்கள் மூலம் அறிய முடிகிறது.  மற்றொரு கற்திட்டையில், குழுவாக கூடியுள்ள மனிதர்கள், கேடயத்துடன் உள்ள வீரன், சூரியன், மரம் மற்றும் விலங்கு உருவங்கள் , வேட்டைக்காட்சிகள், நடனம் போன்றவை காட்டப்பட்டுள்ளன.

          இங்குள்ள ஓவியங்கள் வழியே அக்கால மனிதர்களுக்கும், இயற்கைக்கும் உள்ள உறவும், நம்பிக்கையும் புலப்படுகிறது. இங்குள்ள ஓவியங்களில் பெரும்பானவை கோட்டோவியங்களாகவே உள்ளன, இதில் கோடுகளோடு, புள்ளிகளும் சேர்ந்து வருவது குறிப்பிடத்தக்கவையாகும். இவ்வாறு ஓவியங்களில் புள்ளிகள் பயன்படுத்துவது தமிழகப் பாறை ஓவியங்களில் அரிதானது. அதுபோல ஓவியங்களுக்கு  வெள்ளை நிறமே அதிகம் பயன்படுத்திய நிலையில் சில மனித உருவங்கள் கறுப்பு வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது என்பது சிறப்பு. இவ்வாறான கறுப்பு வண்ண ஓவியங்கள் பழனி மலைப் பகுதிகளிலும், உசிலம்பட்டி பகுதிகளில் மட்டுமே தமிழகத்தில் காணப்படுகின்றது.

ஒளிப்படம்எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
குறிப்புதவிகள்
வீடு, வேட்டைக்காட்சி, வட்டங்கள், குழு நடனம், மனிதர் மற்றும் விலங்குகளின் கை அச்சு
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    13 Files

  • TVA_PNT_00043_மகராஜகட...

  • TVA_PNT_00043_மகராஜகட...

  • TVA_PNT_00043_மகராஜகட...

  • TVA_PNT_00043_மகராஜகட...

  • TVA_PNT_00043_மகராஜகட...

  • TVA_PNT_00043_மகராஜகட...

  • TVA_PNT_00043_மகராஜகட...

  • TVA_PNT_00043_மகராஜகட...

  • TVA_PNT_00043_மகராஜகட...

  • TVA_PNT_00043_மகராஜகட...

  • TVA_PNT_00043_மகராஜகட...

  • TVA_PNT_00043_மகராஜகட...

  • TVA_PNT_00043_மகராஜகட...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 15 Sep 2017
பார்வைகள் 144
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 2

தொடர்புடைய ஓவியம்