ஓவியம்
ஆழியார்
ஓவியம் இருப்பிடம் #
ஊர் ஆழியார்
வட்டம் பொள்ளாச்சி
மாவட்டம் கோயம்புத்தூர்
ஓவியத்தின் பெயர் ஆழியார்
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை பாறை ஓவியங்கள்
விளக்கம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆழியார் அணைக்கு மேலே உள்ள காடம்பாடி (மின் நிலையம்) செல்லும் வழியில் உள்ள மாவடைப்பு எனும் மலைக் கிராமத்திற்கு அருகே உள்ள தேன் பாறைக் குகை உள்ளது. இது சுமார் 50 அடி உயரமும் 100 அடி அகலம் கொண்ட பாறை ஓதுக்கு. இங்கு சுமார் 100 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வரையப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் ஓவியங்களில் பல சமீப காலகட்டங்களில் வரையப்பட்டவையாகும் இருப்பினும் சில தொன்மையான ஓவியங்களும் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, புலி ஒன்று மானைத் தாக்க தயார் நிலையில் இருப்பதும், அதனருகே மற்றொரு மான் ஒன்றை இருவர் வேட்டையாட தயாராக இருக்கும் காட்சியாகும். அதுபோல யானை, மாடுகள், மனித உருவங்கள், குறியீடுகள், அலங்கார ஓவியங்கள் மற்றம் தற்கால தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களும் ஆங்காங்கே பழைய ஓவியங்களோடு காணப்படுகின்றது. இப் பாறை ஓவியங்கள் அமைந்துள்ள இட்த்திற்கு அருகே 30 க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கற்திட்டைகள் காணப்படுகின்றன. ஆகையால், இங்குள்ள ஓவியங்களில் சில பெருங்கற்காலத்தில் வரைந்திருக்கலாம் என தெரிகிறது.

ஒளிப்படம்எடுத்தவர் க.த.காந்திராஜன்
குறிச்சொற்கள்
சுருக்கம்

பாறை ஓவியங்கள் அமைந்துள்ள இப் பகுதியில் புழையர், முதுவர், காடர் போன்ற பழங்குடிகள் வாழ்கின்றனர். இங்குள்ள ஓவியங்கள், இப் பழங்குடியினரின் முன்னோர்களால் வரைந்திருக்க வாய்ப்புண்டு. பல்வேறு காலகட்டங்களீல் வெவ்வேறு ஓவியர்களால் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இங்கு வரையப்பட்டுள்ள காட்சிகள் யாவும் வனத்தை மையமாக வைத்து காட்டப்பட்டுள்ளது.

குறிப்புதவிகள்
ஆழியார்
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    11 Files

  • TVA_PNT_00004_ஆழியார்...

  • TVA_PNT_00004_ஆழியார்...

  • TVA_PNT_00004_ஆழியார்...

  • TVA_PNT_00004_ஆழியார்...

  • TVA_PNT_00004_ஆழியார்...

  • TVA_PNT_00004_ஆழியார்...

  • TVA_PNT_00004_ஆழியார்...

  • TVA_PNT_00004_ஆழியார்...

  • TVA_PNT_00004_ஆழியார்...

  • TVA_PNT_00004_ஆழியார்...

  • TVA_PNT_00004_ஆழியார்...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 10 May 2017
பார்வைகள் 96
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 11

தொடர்புடைய ஓவியம்