Back
ஓவியம்
சர் ஜோர்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி
ஓவியம் இருப்பிடம் #
ஊர் சென்னை
வட்டம் சென்னை
மாவட்டம் சென்னை
ஓவியர் பெயர்
ஓவியத்தின் பெயர் சர் ஜோர்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை நவீனக் கலைகள் - எண்ணெய் வண்ண உருவ ஓவியம்
விளக்கம்

ஓஸ்வால்ட் பிர்லி  (Sir Oswald Hornby Joseph Birley)

          ஓஸ்வால்ட் பிர்லி  (Sir Oswald Hornby Joseph Birley - 31 March 1880 – 6 May 1952). 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் ஒரு ஆங்கிலேய உருவப்பட ஓவியர் மற்றும்  அரச குடும்ப உருவப்படம் வரைபவராக திகழ்ந்தார்.  பிர்லி 1880 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நியூசிலாந்தில் ஹக் பிரான்சிஸ் பிர்லே (1855-1916) என்பவருக்கு மகனாக  பிறந்தார். அவர் ஒரு பழைய லங்காஷயர் (Lancashire)  குடும்பத்தில் பிறந்தவர். இங்கிலாந்திற்கு திரும்பிய பிறகு லண்டன் ஹாரோ ஸ்கூலில் படித்தார் மற்றும் டிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ் போன்ற இடங்களில் மேற்படிப்புக்குச் சென்றார். முதலாம் உலகப் போரில் பிரான்சுக்காக  அவர் பணியாற்றினார், முதலில் ராயல் ஃபுஸிலிஸர்களுடன் பின்னர் புலனாய்வுப் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டார் அதன் பின் கேப்டன் பதிவி பெற்றார். அரச குடும்பத்துக்கு மிகவும் பிடித்த ஓவியர். இவர் கிங் ஜோர்ஜ் வி ( King Geroge V), ராணி மேரி ( Queen Mary), கிங் ஜார்ஜ் VI (King George VI) , ராணி எலிஸபத் ( Queen Elizabeth ) , ராணி தாய் ( Queen Mother) மற்றும் தற்போதைய பேரரசர் ராணி எலிசபெத் II (Queen Elizabeth II) ஆகியோரின் சிறப்பம்சங்களுக்காக நன்கு அறியப்பட்டவர்.

          பிர்லி அவரது நண்பர் சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் உருவ ஓவியங்களை அதிக அளவில் வரைந்தார் மற்றும் இவர் வரைந்த ஆளுயர மகாத்மா காந்தியின் உருவ ஓவியம் சுதந்திரத்துக்குப்பின் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி லோக் சபையில் வைக்கப்பட்டது. ஜெனரல்கள் ஐசனோவர் (Eisenhower), மற்றும் மாண்ட்கோமரி (Montgomery), போன்ற பல போர்க்கால தலைவர்களின் உருவங்களையும் அதுபோல அட்மிரல் மவுண்ட்பேட்டன் (Mountbatten) மற்றும் ஏர் மார்ஷல் டிரஞ்சார்ட் (Trenchard) வரைந்தார். மேலும், அமெரிக்க செல்வந்தர்களான ஆண்ட்ரூ மெல்லன் மற்றும் ஜே. பி. மோர்கன் ஆகியோரின் உருவப் படங்களை வரைந்தார்.

சர் ஜோர்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி (Sir George Frederick Stanley) 

          லெப்டினன்ட் கர்னல் சர் ஜோர்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி (Sir George Frederick Stanley)  (14 October 1872 – 1 July 1938) ஒரு பிரிட்டிஷ் சிப்பாய் மற்றும் கன்சர்வேடிவ் கட்சி அரசியல்வாதி ஆவார் பின்னர்  பிரிட்டனுக்கான இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராயிருந்தார். அவர் 1929 முதல் 1934 வரை சென்னை மாகாண ஆளுநராகவும், 1934 இல் இந்தியாவின் வைசிராய் ஆகவும் பணியாற்றினார்.

          இவர் முக்கியமான காலகட்டத்தில் வைசிராய் பொறுப்பேற்றார். இக்காலகட்டத்தில் பொருளாதாரம் மோசமடைந்தது. பெரும் மந்த நிலை ஆரம்பமானது. ஸ்வராஜ் கட்சி, சட்ட மறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக தேர்தல்களை புறக்கணித்தது. மேலும் நீதிக் கட்சி 1930 மற்றும் 1934 தேர்தல்களில் அதிகாரத்திற்கு வந்தது.  ஸ்டான்லி கவர்னர் பதவியில் இருந்தபோது, காவேரி ஆற்றின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டது. அணை உருவாக்க காரணமாய் இருந்தனால் இந்நீர்த்தேக்கத்திற்கு இவரை கொளரவபடுத்தும் விதமாக இவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.  ஸ்டான்லி 17 ஜனவரி 1930 இல், மெட்ராஸில் கௌடியா மடத்திற்கும், கோயில் ஒன்றிற்கும் அடிக்கல் நாட்டினார்.

          தென்னிந்திய இரயில்வே நிறுவனத்தின் சென்னை நகர துணை நகரத்தின் முதல் சேவை ஏப்ரல் 2, 1931 அன்று சென்னை பீச் ரெயில் நிலையத்திலிருந்து ஸ்டான்லியால் துவக்கப்பட்டது. ஜூலை 2, 1938 இல் ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் ஐந்து வருட மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை டிப்ளமோ படிப்பை ஸ்டான்லி திறந்து வைத்தார்., இவரை கொளரவபடுத்தும் விதமாக  இக்கல்லூரிக்கு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி என பெயர் சூட்டப்பட்டது.

ஒளிப்படம்எடுத்தவர் தணிகை மணி
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
குறிப்புதவிகள்
சர் ஜோர்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 23 Jun 2017
பார்வைகள் 202
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய ஓவியம்