Back
ஓவியம்
மான்கள், எருமைகள், புலி, யானை, முள்ளம்பன்றி, யானை மற்றும் வேட்டைக்காட்சிகள்
ஓவியம் இருப்பிடம் #
ஊர் கோவனூர்
வட்டம் பெரியநாயக்கன்பாளையம்
மாவட்டம் கோயம்புத்தூர்
ஓவியத்தின் பெயர் மான்கள், எருமைகள், புலி, யானை, முள்ளம்பன்றி, யானை மற்றும் வேட்டைக்காட்சிகள்
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை பாறை ஓவியங்கள்
விளக்கம்

          கோவனூர், பெரியநாயக்கன்பாளையம் தாலுக்காவில், கோயம்புத்தூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் வடமேற்கில் உள்ள மலையடி கிராமமாகும். இது நீலகிரி மலைத் தொடரின்  நீட்டிப்பு ஆகும். இங்குள்ள பூங்கோல் தாயார் என்ற மலைக்கோயில் பாறையின் வெளிப்புறத்தில் சுமார் 60 ஓவியங்கள் உள்ளன. இங்கு உருவங்கள் குழுவாகவும், தனியாகவும் வரையப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களில், மான்கள், புலியின் உருவங்கள், காட்டெருமைகள், உடும்பு, மற்றும் அம்புடன் வேட்டைக்காரர்கள், யானை-வேட்டை போன்றவை காட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் 40 அடி நீளமும் மற்றும் 15 அடி உயரத்தில்  காணப்படுகின்றன. இங்குள்ள பெரும்பாலான ஓவியங்கள் சுண்ணாம்பு அடித்து மறைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஓவியங்களும் யதார்த்தமான தன்மையில் உள்ளன. இதை வரைந்த ஓவியர்கள் உருவங்களை மிக கவனமாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கியுள்ளர். இங்குள்ள ஓவியங்கள் பல்வேறு கால மற்றும் பல்வேறு பாணிகளில் உள்ளன.

          ஓவியங்கள் யாவும் வெள்ளை வண்ணத்தில் கோட்டோவியமாகவும், உருவங்களுக்குள் வண்ணம் நிறப்ப்ப்பட்டும் காணப்படுகின்றது. கோவனூருக்கு அருகில் இருக்கும் மலையடிவாரப் பகுதிகளில் வேட்டைச்சமூகமான  இருளர் மற்றும் குரும்பர் பழங்குடியினர் இருவரும் இன்றளவும் அங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு வரையப்பட்ட ஒரு புலி ஓவியத்தில் வாய் திறந்த நிலையில், வால் சுருட்டியவாறு யதார்த்தமாக காட்டப்பட்டுள்ளது. 

ஒளிப்படம்எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
குறிப்புதவிகள்
மான்கள், எருமைகள், புலி, யானை, முள்ளம்பன்றி, யானை மற்றும் வேட்டைக்காட்சிகள்
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    13 Files

  • TVA_PNT_00038_கோவனூர்...

  • TVA_PNT_00038_கோவனூர்...

  • TVA_PNT_00038_கோவனூர்...

  • TVA_PNT_00038_கோவனூர்...

  • TVA_PNT_00038_கோவனூர்...

  • TVA_PNT_00038_கோவனூர்...

  • TVA_PNT_00038_கோவனூர்...

  • TVA_PNT_00038_கோவனூர்...

  • TVA_PNT_00038_கோவனூர்...

  • TVA_PNT_00038_கோவனூர்...

  • TVA_PNT_00038_கோவனூர்...

  • TVA_PNT_00038_கோவனூர்...

  • TVA_PNT_00038_கோவனூர்...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 26 Jul 2017
பார்வைகள் 118
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 18

தொடர்புடைய ஓவியம்