அகழாய்வு
நிச்சாம்பாளையம்
அகழாய்விடத்தின் பெயர் நிச்சாம்பாளையம்
ஊர் நிச்சாம்பாளையம்
வட்டம் பெருந்துறை
மாவட்டம் ஈரோடு
அகழாய்வு தொல்பொருட்கள் கல்வட்டம், குத்துக்கல், இடுதுளையுடன் கூடிய கற்பலகை, பெருங்கற்கால மட்கலன்கள், ஜாடிகள், கிண்ணங்கள்
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை
விளக்கம்
நிச்சாம்பாளையம் என்னும் ஊர் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் உள்ள குறுவட்டமான திங்களூரில் அமைந்துள்ளது. இங்கு நடைபெற்ற அகழாய்வுகளில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த மட்கலன்கள் கிடைத்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஜாடிகளும் கிண்ணங்களும் ஆகும். இங்கு கல்வட்டம், குத்துக்கல் ஆகிய ஈமச்சின்ன வகைகள் காணப்படுகின்றன. அகழாய்வில் வெளிப்பட்ட ஈமச்சின்னம் ஒன்று பல அறைகளைக் கொண்ட கற்பதுக்கையாகும். அறைகள் கற்பலகைகளால் தடுக்கபட்டுள்ளன. கற்பலகை ஒன்று இடுதுளையுடன் காணப்பட்டது.
ஒளிப்படம்எடுத்தவர் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை
குறிச்சொல்
சுருக்கம்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நிச்சாம்பாளையம் என்னும் ஊரில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் இவ்வூரில் பெருங்கற்காலப் பண்பாடு நிலவியிருந்ததை கண்டறிய முடிந்தது. கல்திட்டை, கற்குவை ஆகிய பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை அகழாய்வு செய்த பொழுது பல வகையான மட்கலன்கள் வெளிக்கொணரப்பட்டன.
குறிப்புதவிகள்
நிச்சாம்பாளையம்
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    14 Files

  • TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈர...

  • TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈர...

  • TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈர...

  • TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈர...

  • TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈர...

  • TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈர...

  • TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈர...

  • TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈர...

  • TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈர...

  • TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈர...

  • TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈர...

  • TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈர...

  • TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈர...

  • TVA_EXC_00054/TVA_EXC_00054_ஈர...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 242
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய அகழாய்வு