மாளிகை மேடு
அகழாய்விடத்தின் பெயர் | மாளிகை மேடு |
---|---|
ஊர் | மாளிகைமேடு |
வட்டம் | பண்ருட்டி |
மாவட்டம் | கடலூர் |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 1999-2000 |
அகழாய்வு தொல்பொருட்கள் | கருப்பு-சிவப்பு, சிவப்பு மற்றும் ரௌலட்டட் பானையோடுகள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், உஜ்ஜெயின் குறியீடு கொண்ட சாதவாகன அரசர்கள் காலத்திய செப்புக்காசு |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
விளக்கம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் அமைந்துள்ள மாளிகைமேடு என்ற ஊரில் 1999-2000 ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வின் மூலம் மூன்று கால கட்ட பண்பாட்டினைப் பிரதிபலிக்கும் முகமாக தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், ரௌலட்டட் பானை ஓடுகள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடும் மற்றும் உஜ்ஜெயின் குறியீடு கொண்ட சாதகவாகன அரசர்கள் காலத்திய செப்புக் காசும் அகழாய்வுக் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. கி.மு. 300 முதல் கி.பி.1300 வரை இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தனர் என்பது தொல்லியல் ஆதாரங்கள் மூலம் அறியப்படுகின்றது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் அமைந்துள்ள மாளிகைமேடு என்ற ஊரில் 1999-2000 ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வின் மூலம் மூன்று கால கட்ட பண்பாட்டினைப் பிரதிபலிக்கும் முகமாக தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், ரௌலட்டட் பானை ஓடுகள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடும் மற்றும் உஜ்ஜெயின் குறியீடு கொண்ட சாதகவாகன அரசர்கள் காலத்திய செப்புக் காசும் அகழாய்வுக் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. கி.மு. 300 முதல் கி.பி.1300 வரை இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தனர் என்பது தொல்லியல் ஆதாரங்கள் மூலம் அறியப்படுகின்றது. |
|
குறிப்புதவிகள்
|

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 04 May 2017 |
பார்வைகள் | 21 |
பிடித்தவை | 0 |