அகழாய்வு
தலைச்சங்காடு
அகழாய்விடத்தின் பெயர் தலைச்சங்காடு
ஊர் தலைச்சங்காடு
வட்டம் சீர்காழி
மாவட்டம் நாகப்பட்டினம்
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் 2010-2011
அகழாய்வு தொல்பொருட்கள் சிதைந்த செங்கல் கட்டடப் பகுதி, உடைந்த செங்கல் துண்டுகள், கூரை ஓடுகள், சொரசொரப்பான பானை ஓடுகள், கருங்கல்லால் ஆன கட்டடப் பகுதிகள், சுதை சிற்பங்கள், உடைந்த சுதை சிற்பங்கள், பல்வகை மட்பாண்ட ஓடுகள், சுடுமண் கூரை ஓடுகள், கண்ணாடி துண்டுகள், வட்டவடிவ சில்லுகள், சுடுமண் குயவன் வனை கருவி, அகல் விளக்குகள், மணிகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், பல்வகை அலங்கார ஓடுகள்
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
விளக்கம்

            தலைச்சங்காட்டில் நடத்தப்பட்ட அகழாய்வில் இரண்டு அகழாய்வுக் குழிகளும், மூன்று மாதிரி அகழாய்வுக் குழிகளும் அமைக்கப்பட்டன. அகழாய்வில் மூன்று காலகட்டங்களைச் சார்ந்த மண்ணடுக்குகள் காணப்பட்டன.

         முதல் மண்ணடுக்கில் சொரசொரப்பான சிவப்பு நிற மட்கலன்களும், உடைந்த காரைத் துண்டுகளும், உடைந்த செங்கல் துண்டுகளும், கூரை ஓடுகளும் காணப்பட்டன. முழுமையாக 5 செங்கல்லும் ஒரே அளவானதாக காணப்பட்டன. இவற்றில் குறிப்பிடும்படியான கருங்கல்லால் ஆன யாளி வரி சிற்பம் வெளிக்கொணரப்பட்டது. சோழர் காலக் கோயில் ஒன்று இடிபாடுகளுடன் புதைந்து உள்ள பகுதியாக இவை கருதப்படுகிறது. இரண்டாம் மண்ணடுக்கில் முழுமையான செங்கற்களும், முக்கோண வடிவ செங்கற்களும் கிடைத்துள்ளன. இவை ஒரு கட்டுமானத்தில் இருந்து சேர்ந்து விழுந்தது போல காணப்பட்டன. இவற்றுடன இரும்பு ஆணிகள், கூரை ஓடுகள் போன்ற தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

          இவ்வகழாய்வுக் குழியில் காணப்படும் கூரை ஓடுகள் தலைப்பகுதி 'L' போன்ற கொக்கி வடிவிலும், அடிப்பகுதி அரை வட்ட வடிவிலும் அமையப்பெற்றுள்ளது. இங்கு சிதைந்த சுதையாலான கோயில் கோபுரத்தில் காணப்படும் சிற்பங்களின் பல பகுதிகள் சேகரிக்கப்பட்டன. முதல் அகழாய்வுக்குழியின் மூன்றாவது மண்ணடுக்கில் பளபளப்பான மட்கலன்களின் ஓடுகளும், மூடி பகுதிகளும் காணப்பட்டன.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

         பூம்புகார் அருகில் தலைச்சங்காடு பற்றி இலக்கியங்கள் குறிப்பிடும் செய்திகளின் அடிப்படையிலும், மேற்பரப்பு ஆய்வுகளில் கிடைத்த கருப்பு சிவப்பு நிறப் பானை ஓடுகள், கூரை ஓடுகள் துண்டுக் கல்வெட்டுகள் ஆகியவற்றினைக் கொண்டும் இங்கு அகழாய்வு தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டது. தலைச்சங்காடு தொன்மை பூம்புகாரின் ஒரு பகுதியாக விளங்கியுள்ளது. இவ்வூர் வருவாய்த் துறையால் “தலையுடையவர் கோயில் பத்து“ என்று வழங்கி வருகிறது. தலைச்சங்காடு ஒரு பேரூராகும். இவ்வூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் மூலம் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மக்கள் வாழ்ந்திருந்தனர் எனத் தெரிகின்றது.

குறிப்புதவிகள்
தலைச்சங்காடு
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 Oct 2018
பார்வைகள் 17
பிடித்தவை 0

தொடர்புடைய அகழாய்வு