
மோதூர்
அகழாய்விடத்தின் பெயர் | மோதூர் |
---|---|
ஊர் | மோதூர் |
வட்டம் | பாலக்கோடு |
மாவட்டம் | தருமபுரி |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 2004-2005 |
அகழாய்வு தொல்பொருட்கள் | அம்மிக்கல், கூராக்கும் கல், வட்டத்தகடு, மைத் தகடுகள், நூற்பு கருவிகள், புகைப்பிடிப்பான்கள், காதணிகள், சங்கு வளையல்கள், குறியீடுகளுடன் கூடிய கிண்ணங்கள், தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள், கார்னீலியன்-கண்ணாடி, அகேட், பளிங்கு கல்லாலான மணிகள், சுடுமண் விளக்கு, இரும்பு உருக்கு குடுவை, கூரை ஓடுகள், இரும்புப் பொருட்கள், சுடுமண் உருவங்கள்- விலங்குகள், தாய்த்தெய்வம், மனித வடிவங்கள் |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
விளக்கம்
மோதூரில் வாழ்விடப்பகுதியில் 14 அகழாய்வுக் குழிகளும், ஈமப்பகுதியில் ஒன்றுமாக மொத்தம் 15 குழிகள் போடப்பட்டன. முதலாவது அகழாய்வுக் குழி மண்டு எனப்படும் மோதூர் மலையடிவாரத்தில் போடப்பட்டது. இங்கு புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கிடைத்தன. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையின் மேற்கில், தருமபுரிக்கு வடமேற்கே 15 கி.மீ. தொலைவில் மோதூர் அமைந்துள்ளது. மோதூர் தட்சிணப்பதம் என்று பண்டையக் காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய NH7 வழித்தடத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது பெருவழியாகும். இவ்வூர் பெருவழிப்பாதையில் அமைந்திருப்பதால் ஏராளமான தொல்லியல் பண்பாட்டுக் கூறுகளைப் பெற்று விளங்குகின்றது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மோதூரில் (2004-05) நடத்திய அகழாய்வு முக்கியத்துவம் வாய்ந்தது. |
|
குறிப்புதவிகள்
|

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 Nov 2017 |
பார்வைகள் | 21 |
பிடித்தவை | 0 |