அகழாய்வு

பாஞ்சாலங்குறிச்சி அரண்மனை
அகழாய்விடத்தின் பெயர் | பாஞ்சாலங்குறிச்சி அரண்மனை |
---|---|
ஊர் | பாஞ்சாலங்குறிச்சி |
வட்டம் | ஒட்டப்பிடாரம் |
மாவட்டம் | தூத்துக்குடி |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 1968-69 |
அகழாய்வு தொல்பொருட்கள் | மாளிகையின் மூன்று அறைகள், மக்கள் கூடும் சபை, கல்யாண மண்டபப் பகுதி, விளக்குகள் வைக்கும் குழிப்பகுதிகள் |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
விளக்கம்
அகழாய்வில் மாளிகையின் முக்கியப் பகுதி வெளிக் கொணரப்பட்டது. நுழைவாயில் கிழக்கு நோக்கி இருப்பதும், மாளிகையின் இருபுறங்களிலும் மூன்று அறைகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. மக்கள் கூடும் சபை இருந்த இடம் இந்த அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டது. உயர்ந்த நிலையில் அமைக்கப்பட்ட மேடையுடன் இச்சபை காட்சியளிக்கிறது. கிழக்குப்புறத்திலுள்ள மேடை, விளக்குகள் வைக்கும் குழிப்பகுதிகள் மற்றும் அலங்கார வார்ப்புகளுடன் காணப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மனின் மாளிகையில் இடம் பெற்றிருந்த கல்யாண மண்டபப் பகுதியும் இவ்வகழாய்வின் மூலம் வெளிக் கொணரப்பட்டது.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டத்தில அமைந்துள்ள பாஞ்சாலங்குறிச்சி, நாயக்க மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைநகரமாக கி.பி.18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் திகழ்ந்திருந்தது. பாஞ்சாலங்குறிச்சி கோட்டைப் பகுதி சுமார் 35 ஏக்கர் நிலப்பரப்பில் மேட்டுப்பகுதியாகத் தென்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்ட மிகக் குறிப்பிடத்தக்க தென்னக ஆட்சியாளருள் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவராவார். அவர் ஆட்சி செய்த மாளிகைப் பகுதியின் எச்சத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இங்கு அகழாய்வு நடத்தப்பட்டது.
|
|
குறிப்புதவிகள்
|
அகழாய்வு

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 04 May 2017 |
பார்வைகள் | 29 |
பிடித்தவை | 0 |