அகழாய்வு

சமயபுரம்
அகழாய்விடத்தின் பெயர் | சமயபுரம் |
---|---|
ஊர் | சமயபுரம் |
வட்டம் | திருச்சி |
மாவட்டம் | திருச்சி |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 1994-1995 |
அகழாய்வு தொல்பொருட்கள் | சங்கு வளையல்கள், கண்ணாடி வளையல்கள், மணிகள், செம்பு நாணயங்கள், இரும்புத் துண்டுகள் |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை |
விளக்கம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என பண்டு அழைக்கப்பட்டது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வடக்கே செல்லாயி அம்மன் கோயிலும், போஜீஸ்வரன் கோயிலும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும், முத்தீஸ்வரன் கோயிலும் அமைந்துள்ளன. தமிழகத்தை ஆண்ட சோழப் பேரரசு வலுவிழந்த நிலையில் இருந்தபோது, கர்நாடகத்தில் ஆண்டுவந்த போசளர்களுடன் மண உறவு கொண்டிருந்தனர். சோழப் பேரரசுக்கு உதவுவதற்காக தமிழகத்தில் பெரும்படையுடன் போசளர்கள் நுழைந்தனர். சோழ மன்னன் மூன்றாம் இராசராசனுக்கு உதவியாக வந்தவர்கள் பாண்டியனையும் அவனுக்கு துணையாக வந்த சிற்றரசர்களையும் விரட்டினர். இன்றைய சமயபுரமும் அன்றைய கண்ணணூர் கொப்பத்தில் சோழன் தன் தலை நகரை மாற்றினான். இந்நிலையில் மூன்றாம் இராசராசச் சோழனை கோப்பெருஞ்சிங்கன் என்ற சிற்றரசன் சிறைவைத்தான். சோழனை மீட்க போசளர்கள் சமயபுரத்தையே தங்களின் இன்னொரு தலைநகராக ஆக்கிக்கொண்டு தங்கினர். அத்தகைய போசளர்களின் வரலாற்றினை அறியும் பொருட்டு சமயபுரத்தில் அகழாய்வு நடத்தப்பட்டது. ஆனால் இவ்வகழாய்வு மாதிரிக்குழி அகழாய்வாக நடத்தப்பட்டது. இவ்வகழாய்வில் வரலாற்றுத் தடயங்கள் பெருமளவில் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி வட்டத்தில் சமயபுரம் அமைந்துள்ளது. திருச்சி-சென்னைப் பெருவழிச்சாலையில் அமைந்துள்ள இவ்வூர் மாரியம்மன் கோவிலுக்குப் புகழ்பெற்றது. சமயபுரத்திலுள்ள போஜேஸ்வரஸ்வாமி கோயிலின் அருகே 1994-95 ஆம் ஆண்டில் மாதிரிக்குழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழாய்வில் சங்கு மற்றும் கண்ணாடி வளையல்களும், மணிகளும், செம்பு நாணயங்களும், இரும்புத் துண்டுகளும் கிடைத்தன.
|
|
குறிப்புதவிகள்
தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள் [Archaelogical Excavations in Tamilnadu], சு. இராசவேலு, கோ. திருமூர்த்தி, பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995.
|
அகழாய்வு

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 27 |
பிடித்தவை | 0 |