Back
அகழாய்வு
உட்கோட்டை-மாளிகை மேடு
அகழாய்விடத்தின் பெயர் உட்கோட்டை-மாளிகை மேடு
ஊர் கங்கை கொண்ட சோழபுரம்
வட்டம் ஜெயங்கொண்டம்
மாவட்டம் அரியலூர்
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் 1980, 1984, 1991, 1996, 2008-09
அகழாய்வு தொல்பொருட்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட மாளிகை மதிற்சுவர்கள், சதுர வடிவ கருங்கல் தூண்கள், குவார்ட்ஸ் மணிகள், தந்தப் பொருட்கள், சங்கு வளையல்கள், கருப்புக் கண்ணாடி வளையல் துண்டுகள், இரும்பு ஆணிகள், இரும்பு பிடிப்
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
விளக்கம்
சோழர்களின் அரண்மனைப்பகுதி இருந்த பெரிய பரப்பளவு அகழாய்வு செய்யப்பட்டது. உட்கோட்டை-மாளிகை மேட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட மாளிகையின் மதிற்சுவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. செங்கற்களின் பருமன் 1.10 செ.மீ. ஆகும். சதுரவடிவ கருங்கல் தூண்கள் 2மீ. இடைவெளியில் நடப்பட்டிருந்தது. தூண்களின் அடிப்பாகம் அகழாய்வில் வெளிக் கொணரப்பட்டது. குவார்ட்ஸ் மணிகள், தந்தப் பொருட்கள், சங்கு வளையல்கள், கனமான கூரை ஓடுகள் ஆகியன தொல்பொருட்களாக இங்கு கிடைத்துள்ளன. சீனப் பானையோடுகள் அதிக எண்ணிக்கையில் அகழாய்வில் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச்சீனப் பானையோடுகள், சோழப் பேரரசர்கள் சீன நாட்டுடன் கி.பி.11-12-ஆம் நூற்றாண்டில் கொண்டிருந்த வணிகத் தொடர்பைக் காட்டுகின்றன. பொதுவாக இங்கு மேற்கொண்ட அகழாய்வுகளின் மூலம் மூன்று கால கட்டத்தைச் சார்ந்த கட்டிடப் பகுதிகள் இருந்திருக்கின்றது என்பது தெரிகின்றது. இராசேந்திர சோழன்
ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கங்கை கொண்ட சோழபுரம் இராஜேந்திர சோழனால் நிறுவப்பட்ட சோழர்களின் இரண்டாம் தலைநகரமாகும். பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக சுமார் 250 ஆண்டுகளுக்கு சிறப்பு விளங்கியது. இவ்வகழாய்வு வாழ்விடப்பகுதி அகழாய்வு வகையாகும். பிற்காலச் சோழர்களின் அரண்மனை அகழாய்வாக இது வெளிக்கொணரப்பட்டது. இந்நகரம் இரண்டு மதிற்சுவர்களை அரணாகக் கொண்டு விளங்கியிருந்தது என்ற செய்தி அக்காலத்திய இலக்கியங்கள், கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகிறது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சோழர்களின் அரண்மனை இருந்த பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்புதவிகள்
உட்கோட்டை-மாளிகை மேடு
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 04 May 2017
பார்வைகள் 27
பிடித்தவை 0

தொடர்புடைய அகழாய்வு