அகழாய்வு
சிவகளை
அகழாய்விடத்தின் பெயர் சிவகளை
ஊர் பேட்மாநகரம் சிவகளை
வட்டம் ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம் தூத்துக்குடி
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் பொ.ஆ.2020
அகழாய்வு தொல்பொருட்கள் கருப்பு-சிவப்பு பானைகள், சிவப்பு பானைகள், கருப்பு சிவப்பு பானையோடுகள், கூம்பு வடிவ சாடிகள், நீர்க்குடுவைகள் தாங்கிகள், கிண்ணங்கள், தானிய சேமிப்புக் கலன்கள்
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
விளக்கம்
தூத்துக்குடி மாவட்டம் சிவகளை என்னுமிடத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் 2020-இல் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டது. இவ்வகழாய்வு தென் மாவட்டங்களில் கடலோர பறம்புகளில் செய்யப்பட்ட அகழாய்வு என்பது குறிப்பிடத்தக்கதாகும். தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் ஈமச்சின்னத்தை அடுத்து சிவகளை முக்கியதொரு அகழாய்விடமாகும். இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கருப்பு-சிவப்பு பானைகள், சிவப்பு பானைகள், கருப்பு சிவப்பு பானையோடுகள், கூம்பு வடிவ சாடிகள், நீர்க்குடுவைகள் தாங்கிகள், கிண்ணங்கள், தானிய சேமிப்புக் கலன்கள் முதலிய தொல்கலைப் பொருட்கள் பெருங்கற்கால மண்ணடுக்குகளில் கிடைத்துள்ளன.
ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
பேட்மாநகரம்-சிவகளை சாலையில் உள்ள பறம்பில் முதுமக்கள் தாழிகள், இரும்புப் பொருட்கள் மேற்பரப்பு களஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தொல்லியல் களம் அகன்ற பரப்பை உடைய ஈமக்காடாக விளங்குகிறது. அலெக்ஸாண்டர் ரீ 1900களில் நெல்லையின் 36 இடங்களை கண்டுபிடித்து வரைபடம் தயாரித்து அவை பெருங்கற்காலச் சின்னங்கள் என்று குறிப்பிட்டுள்ளார், அந்த 36 இடங்களில் சிவகளை பேட்மாநகரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது,
சிவகளை
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 179
பிடித்தவை 0

தொடர்புடைய அகழாய்வு