அகழாய்வு
திருக்கோயிலூர்
அகழாய்விடத்தின் பெயர் திருக்கோயிலூர்
ஊர் திருக்கோயிலூர்
வட்டம் திருக்கோயிலூர்
மாவட்டம் விழுப்புரம்
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் 1994
அகழாய்வு தொல்பொருட்கள் கருப்பு சிவப்பு பானையோடுகள், ரௌலட்டட் பானையோடுகள், ஆம்போரா, சிவப்பு பானைகள், பானைக்குறியீடுகள், சுடுமண் உருவங்கள்-தாய்த்தெய்வம், மனித பாதம், முழங்கால், சுடுமண் பொருட்கள் - புகைப்பான், வட்டுகள், கூரை ஓடுகள், காசு அச்சு, தக்களி, இரும்புப் பொருட்கள் மற்றும் சங்கு பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணிகள், செம்பு வளையல்கள்
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
விளக்கம்

         திருக்கோயிலூர் அகழாய்வில் ஆறு அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டன. அதிலிருந்து வெளிப்படுத்தப் பட்ட தொல்பொருட்களின் மூலம் இப்பகுதியில் நிலவிய பொ.ஆ.மு.100 முதல் பொ.ஆ.1700 வரையிலான தொடர்ச்சியான பண்பாட்டினை அறிய முடிகிறது. இந்த அகழாய்வு நான்கு பண்பாட்டுக் காலங்களை காட்டுகின்றது. இவ்வகழாய்வில் கிடைத்த ஆம்போரா பானையோடுகள் ரோமானியத் தொடர்பினைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இப்பகுதியில் பண்டைய காலத்தில் முக்கியத் தொழிலாக வேளாண்மை இருந்துள்ளது. இங்கு கிடைத்துள்ள சுடுமண்ணாலான பெண் உருவங்கள் குறிப்பிடத்தக்கவை. புகைப்பான்கள் காலத்தால் பிந்திய மண்ணடுக்குகளிலேயே கிடைக்கின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

          திருக்கோயிலூர் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மலையமானின் ஊராக அறியப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்வூரில் தமிழ்நாடு தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட அகழாய்வின் மூலம் இப்பகுதியின் வரலாற்றுத் தொன்மையை அறிய முடிகிறது. பண்பாடுகள் சிறந்தோங்கிய நான்கு காலகட்டங்கள் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புதவிகள்
திருக்கோயிலூர்
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 Oct 2018
பார்வைகள் 22
பிடித்தவை 0

தொடர்புடைய அகழாய்வு