அகழாய்வு

பல்லவமேடு
அகழாய்விடத்தின் பெயர் | பல்லவமேடு |
---|---|
ஊர் | பல்லவமேடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 1970-71 |
அகழாய்வு தொல்பொருட்கள் | வட்ட உறைகிணறு, செங்கல் தரைத்தளம், கோயில் விமானம் கட்டட உறுப்புகள் (உடைந்த நிலையில் புதையுண்டது), வீரபத்திரர் கற் சிற்பம் |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
விளக்கம்
பல்லவமேடு அகழாய்வில் பல்லவர் கால கற்றளியின் தள உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டன. வட்ட உறைகிணறு, மற்றும், செங்கல் கட்டடப்பகுதியும் வெளிக்கொணரப்பட்டது. மிக அதிக அளவில் பானையோடுகள் கிடைக்கப்பெற்றன. இவை பல்லவர் காலத்திய (கி.பி.600-900) பயன்பாட்டு மட்கலன்களாகும்.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
காஞ்சிபுரம் நகருக்கு எல்லையில் பல்லவமேடு அமைந்துள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட களஆய்வின் போது பல்லவர் காலத்திய தொல்பொருள் எச்சங்கள் கண்டறியப்பட்டன. எனவே இங்கு தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழாய்வு பல்லவர்களின் தலைநகரமாகிய காஞ்சிபுரத்தில் அமைந்த பல்லவமேடு என்னும் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதன் வாயிலாக பல்லவர்களின் வரலாற்றினை கல்வெட்டுகள், செப்பேடுகள், கோயில்கள் மட்டுமின்றி தொல்லியல் அகழாய்வு மூலமாகவும் அறிந்து கொள்ள முடிந்தது.
|
|
குறிப்புதவிகள்
|
அகழாய்வு

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 04 May 2017 |
பார்வைகள் | 32 |
பிடித்தவை | 0 |