Back
அகழாய்வு
சேந்தமங்கலம் - கோட்டைமேடு-குயவனோடை
அகழாய்விடத்தின் பெயர் சேந்தமங்கலம் - கோட்டைமேடு-குயவனோடை
ஊர் சேந்தமங்கலம்
வட்டம் உளுந்தூர்பேட்டை
மாவட்டம் விழுப்புரம்
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் 1995-1996
அகழாய்வு தொல்பொருட்கள் வட்டச்சில்லுகள், கூரைஓடுகள், செங்கற்கள், வளையல் துண்டுகள், நீர் வெளியேறும் குழாய், இரும்பு ஆணிகள், கருப்பு சிவப்பு பானையோடுகள், கருப்பு மற்றும் சிவப்பு பானையோடுகள், பழுப்பு நிற பானையோடுகள், சாயம் பூசப்பட்ட பானையோடுகள்
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
விளக்கம்

          சேந்தமங்கலத்தில் குயவனோடை என்னுமிடத்தில் அகழாய்வுக் குழிகள் போடப்பட்டன. “ட“  வடிவத்திலான ஓடுகள், செங்கற்கள், சுடுமண் குழாய்கள், வட்டச்சில்லுகள் ஆகியன முதல் அகழாய்வுக்குழியின் மண்ணடுக்குகளில் கிடைத்தன. இவ்வகழாய்வில் இரண்டு சுவர்ப்பகுதிகள் வெளிக்கொணரப்பட்டன. தரைத்தளம் செங்கல் தளமாக காணப்பட்டப் பகுதிகளும், கூரைஓடுகளும் காணப்பட்டன. இவ்வகழாய்வில் ஏராளமான எண்ணிக்கையில் கருப்பு சிவப்பு, சிவப்பு, கருப்பு, பழுப்பு, ரௌலட்டட் ஆகிய பானையோடுகள் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்துள்ள தொல்பொருட்கள் ஒரு தொடர்ச்சியான மக்களின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துகின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

           விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம் காடவர் அரசர்களின் தலைநகரமாக விளங்கியது. கெடிலம் நதிக்கரையின் வடபுறத்தில் இவ்வூர் அமைந்துள்ளது.  ஊரின் தென்புறத்தில் தொல்லியல் மண்மேடு அமைந்துள்ளது. இடைக்கால சோழர்கள் காலத்தில் தொண்டை மண்டலம் சோழர் நிர்வாகத்தின் கீழ் வந்தபொழுது சேந்தமங்கலம் பகுதியை ஆண்டுவந்த காடவர்கள் சிற்றரசர்களாயிருந்தனர். இங்கு மேற்பரப்பாய்வு செய்தபோது ஒரு மண்மேடும் சில செங்கற் கட்டடங்களும் காணப்பட்டன. மேலும் கருப்பு சிவப்பு பானையோடுகள், இரும்பு ஆணிகள் முதலிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு முதலாம் இராஜராஜன் காலத்திய காசுகளும் கிடைத்துள்ளன.

குறிப்புதவிகள்
சேந்தமங்கலம் - கோட்டைமேடு-குயவனோடை
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 Oct 2018
பார்வைகள் 34
பிடித்தவை 0

தொடர்புடைய அகழாய்வு