
கரூர்
அகழாய்விடத்தின் பெயர் | கரூர் |
---|---|
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 1973-79, 1995-96 |
அகழாய்வு தொல்பொருட்கள் | ரௌலட்டட் பானையோடுகள், ரோமன் காசுகள், ஆம்போரா பானையோடுகள், செங்கற்களால் பாவப்பட்ட தரைப்பகுதி, தரைப்பகுதியில் உள்ள வடிகால் அமைப்பு, தமிழ்-பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
விளக்கம்
கரூர் திருச்சி நகரத்திலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சங்க காலச் சேரர்களின் தலைநகரமாக விளங்கிய வஞ்சி தான் கரூர் என்பதை இங்கு நடைபெற்ற அகழாய்வு உறுதிப்படுத்தியுள்ளது. சங்க காலத்தில் கரூர் ஒரு முக்கியமான வணிக மையமாக திகழ்ந்ததற்கான தொல்பொருள் சான்றுகள் இவ்வகழாய்வில் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்துள்ள ரோமானிய நாட்டு ஆம்போரா பானையோடுகள், ரோமானியர் காசுகள் ரோமானியர்களுடனான வாணிகத்தை உறுதிப்படுத்துகிறது. மற்றும் ரௌலட்டட் பானையோடுகள் கிடைத்துள்ளன. தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் பல இங்கு கிடைத்துள்ளதால் கரூர் சங்க காலத்தில் ஒரு தலைசிறந்த வணிக நகரமாக இருந்திருக்க வேண்டும். சேரர்கள் இவ்வூரை தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தனர். முசிறி துறைமுகப்பட்டினத்தை தலைநகரமாகக் கொண்ட சேரர்கள், வணிக செல்வாக்கு மிகுந்திருந்த கருவூரை அதனை ஆண்ட வேளிடமிருந்து கைப்பற்றினர். பின்னர் கரூர் சேரர்களின் தலைநகரமாகியது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தமிழக அகழாய்வு இடங்களுள் கரூர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊராகும். அமராவதி ஆற்றங்கரையில் உள்ள இவ்வூர் திருச்சியிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் சேரர்களின் வணிகத் தலைநகரமாக சங்க காலத்தில் விளங்கியது. வஞ்சி என்று சங்க இலக்கியங்களில் குறிக்கப்படும் ஊர் இதுவேயாகும். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இரு கால கட்டங்களில் இத்தொன்மை வாய்ந்த சங்க கால வணிக நகரத்தை அகழாய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பொறித்த சிவப்பு நிற பானையோடுகள் கிடைத்துள்ளன. மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ரௌலட்டட் மற்றும் ஆம்போரா பானையோடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் ரோமானியர்களோடு கொண்டிருந்து வணிகத் தொடர்பு விளங்குகிறது. கரூரானது பெங்களூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களை மதுரை உட்பட தென்மாவட்டங்களோடும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய கிழக்கு மாவட்டங்களை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது. இப்பூகோள அமைப்பினை பண்டைய காலத்திலும் கொண்டிருந்த கரூர் பெருவழிகளை பெற்று விளங்குகிறது. எனவே வணிகர்களின் முக்கிய சந்திப்பு நகரமாக கரூர் விளங்கியுள்ளது. |
|
குறிப்புதவிகள்
|

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 04 May 2017 |
பார்வைகள் | 54 |
பிடித்தவை | 0 |