சிற்பம்

வீரன்
சிற்பத்தின் பெயர் | வீரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
ஊர் | திருவரங்கம் |
வட்டம் | திருவரங்கம் |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வாழ்வியல் |
ஆக்கப்பொருள் | தந்தம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
யானைத் தந்தத்தினால் ஆன வீரன் சிற்பம்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
திருவரங்கம் கோயிலில் உள்ள தந்தத்தினாலான சிற்பங்களில் ஒன்றான இச்சிற்பம் வீரன் உருவமாகும். இச்சிற்பத்தில் வீரன் வலது கையில் வாளின் கைப்பிடியை பிடித்தவாறும், இடது கையால் வாளின் கூர் முனையை பிடித்தவாறும் உள்ளான். முறுக்கிய மீசையுடன் காணப்படும் இவ்வீரன் அரைக்காற் சட்டை அணிந்துள்ளான். குந்தளம் கொண்டையாக தலையலங்காரமாய் விளங்குகின்றது. நெற்றிப்பட்டை அணி செய்கின்றது. செவிகளில் செவிப்பூக்கள், இரத்தினங்களால் ஆன தோடுகள், கழுத்தில் கண்டிகை, நீண்ட ஆரம், கைகளில் கேயூரம், முன் வளை, கால்களில் சிலம்பு, பாத கடகம் ஆகியன் அணிகளாக விளங்குகின்றன. இடைக்கட்டு இடையைச் சுற்றி இடது முன்னங்கையில் காட்டப்பட்டுள்ளது. வீரன் பாத விரல்களை மட்டும் ஊன்றி மண்டலித்து இயக்க நிலையில் நிற்கிறான்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |