Back
சிற்பம்

திரிவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)

திரிவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)
சிற்பத்தின் பெயர் திரிவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
குறள் வடிவாய் வந்து மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு, விண்ணுக்கும் மண்ணுக்குமாய் அடியெடுத்த திருமாலின் திரிவிக்கிரமர் கோலம்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
பூமியில் ஒரு கால் பதிந்து நிற்க, சமநிலை மாறாது நிற்கிறார் விஷ்ணு. அவரது இடது கால் உயர்ந்து, உயர்ந்து அவரது தோளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. எத்திசையில் அந்தக் கால் செல்கிறது என்பதைக் காண்பிக்கிறது எட்டு கைகளில் ஒரு இடது கை. பிற மூன்று இடது கைகளில் ஒன்றில் வில், ஒன்றில் கேடயம், ஒன்றில் சங்கு. வலது கைகளில் ஒன்றில் வாள், ஒன்றில் கதை, ஒன்றில் சக்கரம். நான்காவது வலது கை விசும்பினை தாங்கிப் பிடிப்பதாக உள்ளது. திருமாலின் பஞ்சாயுதங்கள் இங்கே காட்டப்பட்டுள்ளன. திரிவிக்கிரமனின் ஊன்றிய வலது காலருகே மகாபலியும், சுக்ராச்சாரியாரும் ஒருவர் பின் ஒருவராக அமர்ந்துள்ளனர். இடது காலடியில் உள்ள அரக்கர்களும் நடப்பது தெரியாமல் திகைத்தபடி உள்ளது தெரிகிறது. ஒரு அசுரன் பயத்தில் வாளை உருவ, கைப்பிடியில் கையை வைத்துள்ளான். இவர்களுக்கு மேலே, திரிவிக்கிரமனின் இரு பக்கமும் தலைக்குப்பின் வட்டம் உள்ள இரு பறக்கும் வானவர்கள். அவர்கள்தான் சூரியனும் சந்திரனும். ஆக திரிவிக்கிரமனின் தலை சூரிய சந்திரர்களுக்கும் மேலே, நீள் விசும்பில் எங்கோ, எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. சூரிய சந்திரர்கள் இடை பாகத்தில் காட்டப்பட்டுள்ளனர். இடது புறம் சந்திரனின் அருகே தலைகீழாக விழுந்தபடியுள்ள ஒருவன் திரிசங்குவோ என்கிறார்கள் சிலர். ஆனால் நமுசி என்ற அரக்கன் என்கிறார்கள் சிலர். மகாபலியின் யாகம் நடக்கும் இடத்துக்குள் வாமனர் நுழையும்போது, ‘இந்த ஆசாமி பிரச்னைக்குரியவர்’ என்று முதலில் கண்டுகொண்டது நமுசிதான் என்றும் அதனால் அவனை விட்டார் ஓர் உதை திரிவிக்கிரமர் என்றும் கதை. சூரிய, சந்திரர்களுக்கும் மேல் தளத்தில் தாமரையில் அமர்ந்துள்ள பிரம்மா விஷ்ணுவின் ஓங்கி உயரும் பாதத்தை கமண்டல நீரினால் கழுவி பூஜிக்கிறார். சுட்டிக்காட்டும் திரிவிக்கிரமனின் விரலை மற்றொரு கையால் பிரம்மா பிடித்துள்ளார். பிரம்மாவின் அருகே, கரடி முக ஜாம்பவான் இசைக்கருவியை வைத்துள்ளது போல் தெரிகிறது. மறுபக்கம், சிவன் அனைத்தையும் பார்த்தபடி இருக்கிறார். திரிவிக்கிரமர் இரத்தினங்கள் பதித்த கிரீட மகுடம்அணிந்துள்ளார். நீள் செவிகளில் மகர குண்டலங்கள் விளங்க, கழுத்தில் சரப்பளி என்னும் பட்டையான ஆபரணமும், சவடியும் அணிந்துள்ளார். கைகளில் கேயூரம், முன் வளைகள், மார்பில் துணியாலான முப்புரிநூல், இடையில் அரைப்பட்டியுடன் கூடிய நீண்ட முழாடை கணுக்கால் வரை உள்ளது. இடைக்கட்டு இரு தொடைகளிலும் நெகிழ்ந்துள்ளது. ஓங்கி உலகளந்த உத்தமனின் திருவடிவத்தை பல்லவச் சிற்பி கல்லிலே கதையாக சொல்லிவிட்டான்.
குறிப்புதவிகள்
திரிவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)
சிற்பம்

திரிவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 17
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்