Back
சிற்பம்
மகிஷாசுரமர்த்தினி
சிற்பத்தின் பெயர் மகிஷாசுரமர்த்தினி
சிற்பத்தின்அமைவிடம் மைய அருங்காட்சியகம், சென்னை
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சாக்தம்
ஆக்கப்பொருள் கருங்கல்
அளவுகள் / எடை 64X31 செ.மீ
விளக்கம்
மகிஷாசுரமர்த்தினி எட்டுத்திருக்கைகளில் எறிநிலை சக்கரம், சங்கு, வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கி எருமைத் தலையின் மேல் நிற்கிறார். தேவியின் முன்னிரு கைகள் கத்தி போன்ற ஒன்றைப் பிடித்துள்ளன. அரையாடை உடுத்தியுள்ளார். இடைக்கட்டின் முடிச்சு இடையின் இருபுறமும் பின்புறம் காட்டப்பட்டுள்ளன. மார்பில் குஜபந்தம் அணிந்துள்ளார். செவிகளில் பத்ரகுண்டலங்கள் விளங்குகின்றன. கழுத்தில் கண்டியும், சரப்பளியும் அணி செய்கின்றன. தேவியின் வாகனங்களான மான் மற்றும் சிம்மம் தேவியின் இருபுறமும் நிற்கின்றன. தேவியின் காலடியில் இருபுறமும் இருவீரர்கள் அமர்ந்துள்ளனர். வலதுபுறம் உள்ளவர் தன் தலையை அரிந்து பலி கொடுக்கும் நிலையில் உள்ளார். இடதுபுறம் உள்ளவர் அரைமுழந்தாளிட்டு கையில் பூங்கொத்து போன்ற ஒன்றை கொண்டுள்ளார். இருவரின் முன்னாலும் இருபானைகள் வைக்கப்பட்டுள்ளன. பானைகளை அடியில் தாங்கியுள்ள பிரிமனைகள் காட்டப்பட்டுள்ளன.
ஒளிப்படம்எடுத்தவர் திரு.சுந்தர்ராஜ், பரிவாதினி ஸ்டுடியோ, சென்னை.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தேசிய மைய அருங்காட்சியகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டு மற்றும் இந்தியப் பகுதிகளில் இருந்து வந்த பழமையான தொல்பொருட்கள், கலைவடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவைகளாக சிற்பங்களைக் கூறலாம். பல காலகட்டங்களைச் சேர்ந்த அரசுகளின் கலைப்பாணியில் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. கல், மரம், உலோகம், சுதை போன்ற மூலப்பொருட்களால் ஆக்கப்பட்ட சமயம், வாழ்வியல், கலை மற்றும் பொது வடிவங்கள் சிற்பங்களாக உள்ளன. சிவ வடிவங்கள், விஷ்ணு உருவங்கள், சமண தீர்த்தங்கரர்கள், புத்தர், முருகன், கணபதி, ஜேஷ்டா, மகிஷாசுரமர்த்தினி போன்ற சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அவை எண்ணிக்கையிலும் அதிகம் காணப்படுகின்றன. கலைப்பொருட்களாக பாதுகாக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கலை, புராணம், சமயம், பண்டைய சமூகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றின் வரலாறு அறிய மிகவும் உதவியாய் இருக்கின்றன.
குறிப்புதவிகள்
மகிஷாசுரமர்த்தினி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 19
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்