சிற்பம்
மகிஷாசுரமர்த்தினி
மகிஷாசுரமர்த்தினி
சிற்பத்தின் பெயர் | மகிஷாசுரமர்த்தினி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சாக்தம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
எருமைத் தலையனை வென்று அவன் தலை மேல் தன் வீரக்கழல்கள் மிளிர அமர்ந்திருக்கும் அன்னை மகிஷாசுரமர்த்தினி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
எருமைத்தலை அரக்கனை வென்ற பிறகு அன்னை கொற்றமங்கையாக அமர்ந்திருக்கும் காட்சி. வெற்றி நாயகி பீடத்தின் மேல் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது காலை மடக்கி, இடது காலை எருமைத் தலையின் மீது வைத்துள்ளார். எட்டுத்திருக்கைகளில் சங்கு சக்கரம், வாள், கேடயம், வில், அம்பு, மழு, சூலம், நாகம் ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளார். இச்சிற்பம் புனரமைக்கப்பட்டுள்ளது. எனவே ஆடையணிகள் அதன் பழந்தன்மையை காட்டவில்லை. பீடத்தின் கீழ் இருபுறமும் இரண்டு அடியவர்கள் உள்ளனர். இருவரும் கருடாசனத்தில் அமர்ந்துள்ளனர். வலதுபுறம் இருப்பவர்க்கு குந்தளம் தலையணியாக அமைந்துள்ளது. இடது புறம் இருப்பவர் வலது கையை உயர்த்தி போற்றுகின்றார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
மகிஷாசுரமர்த்தினி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |