Back
சிற்பம்

நின்ற சீர் நெடுமாறனார்

நின்ற சீர் நெடுமாறனார்
சிற்பத்தின் பெயர் நின்ற சீர் நெடுமாறனார்
சிற்பத்தின்அமைவிடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
ஊர் தாராசுரம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
விளக்கம்
63 நாயன்மார்களுள் ஒருவரான பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் என்னும் நின்றசீர் நெடுமாறன்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறன். இவன் சோழ இளவரசி மங்கயர்க்கரசியாரின் கணவர். இம்மன்னன் கூன்பாண்டியன் எனவும் அழைக்கப்படுபவன். நெடுமாறனார், சமண் வலையிலகப்பட்டிருந்து, தன் பட்டத்து அரசியார் மங்கையர்க்கரசியாரும், அமைச்சரும் குலச்சிறையாரும் கொண்ட சிவப்பற்றினாலே மதுரை வந்த ஆளுடைய பிள்ளையாரருளாலே சைவத்தில் மீண்டு வந்து சிவநெறி பெருகச் செங்கோல் செலுத்தினார். போரேற்று வந்து எதிர்த்த வடபுல மன்னரை நெல்வேலிச் செருக்களத்தில் வெற்றி கொண்டனர். சிவனுக்கேற்ற திருத்தொண்டுகள் எல்லாம் செய்து, நீண்டகாலம் திருநீற்று நெறி விளங்கப் புகழ் பெருக அருள் பெருக அரசாட்சி செய்திருந்து சிவனுலகடைந்து பணிந்து இன்பமுற்றிருந்தார். பாண்டிய மன்னன் வீற்றிருக்கும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. மேலே நெடு மாறனார் என்ற மன்னனது பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
நின்ற சீர் நெடுமாறனார்
சிற்பம்

நின்ற சீர் நெடுமாறனார்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்