சிற்பம்

பிராம்மி

பிராம்மி
சிற்பத்தின் பெயர் பிராம்மி
சிற்பத்தின்அமைவிடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
ஊர் தாராசுரம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சாக்தம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
விளக்கம்
ஏழு நிலைகளில் காட்டப்படும் சக்தியின் அம்சங்களாக உள்ள கன்னியர் எழுவரில் முதலாமவராக விளங்கும் பிராம்மி - நான்முகனின் சக்தி வடிவம்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
பீடத்தின் மீது பத்மாசனத்தில் பிராம்மி அமர்ந்துள்ளாள். நான்கு திருக்கைகளுடன் விளங்கும் தேவி நான்முகனின் பெண் சக்தியாக விளங்குபவள். சாவித்திரி என்றும் அழைக்கப்படுகிறாள். ஜடாமகுடமணிந்து, நெற்றியில் தொய்யகத்துடன் கூடிய நெற்றிப்பட்டை விளங்க, காதுகளில் குண்டலங்கள் அணி செய்ய, கழுத்தில் மணியாலான கண்டிகை, சரப்பளி, சவடி அமைய, மார்பில் முப்புரிநூல் துலங்க வீற்றிருக்கிறாள். தோள்களில் தோள் மாலை, வாகுமாலை விளங்குகின்றது. கைகளில் பூரிமத்துடன் கூடிய தோள்வளை, முன்வளைகள் விரல்களில் வளையங்கள் அணிந்துள்ளாள். இடைக்கட்டுடன் கூடிய, மடிப்புகளுடன் கூடிய நீண்ட ஆடையை கணுக்கால் வரை அணிந்துள்ளாள். பாதங்களில் சதங்கை விளங்குகின்றது. நாற்கரங்களில் மேற்கரங்களில் அக்கமாலையும், கெண்டியும் கொண்டு, முன் வலது கையில் சின் முத்திரை காட்டியும், முன் இடது கையில் சுவடிகளைப் பற்றியுள்ளாள். ஞானத்திற்கு அதிபதியாக விளங்கும் பிராம்மி இச்சிற்பத்தில் பிரம்மனைப் போன்று நான்கு முகங்கள் பெறாமல் ஒரு முகம் மட்டுமே உடையவளாக காட்டப்பட்டுள்ளாள்.
குறிப்புதவிகள்
பிராம்மி
சிற்பம்

பிராம்மி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்