சிற்பம்

பரமனையே பாடுவார்

பரமனையே பாடுவார்
சிற்பத்தின் பெயர் பரமனையே பாடுவார்
சிற்பத்தின்அமைவிடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
ஊர் தாராசுரம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
விளக்கம்
சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில் பாடியுள்ள தொகையடியார்களுள் ஒரு வகையினர் பரமனையே பாடுவார்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சுந்தரர் தம் திருத்தொண்ட தொகையில் 60 தனியடியார்களையும், ஒன்பது தொகையடியார்களையும் குறிப்பிட்டுள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு கூட்டத்தினர் அல்லது குழுவினைத் தொகுத்துச் சுட்டுவதைத் தொகை அடியார்கள் என்பர். தொகையடியார்கள் ஒன்பதின்மர் தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை இல்லாத புலவர், பத்தராய்ப் பணிவார்கள், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன் பால் வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார், முழு நீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிச்சார்ந்தார் ஆகியோர் ஆவர். இவர் இன்னார் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாத வேறு பலரையும், தம் காலத்துக்கு முன்பும், பின்பும் வாழ்ந்தவர்களையும், வரவிருப்பவர்களையும் போற்றும் நோக்கில் தொகையடியார் வணக்கத்தைச் சுந்தரர் மேற்கொண்டுள்ளார். வரலாற்று எல்லைக்குள் உட்படாதவர்களையும், சிறப்பிக்கும் சுந்தரரின் இப்பண்பு பெருஞ்சிறப்புக்கு உரியது. இச்சிற்பத்தில் பரமனையே பாடுவார் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக அமர்ந்து, கையில் உள்ள தாளக் கருவியை இசைத்தபடி இறைவனைப் போற்றிப் பாடிக் கொண்டு, அதன் இசையில் இலயித்துள்ளனர். மூவரும் இரு கைகளில் தாளக் கருவிகளை பிடித்துள்ளனர். பெரிய குந்தளக் கொண்டை தலைக்கோலமாய் கொண்டு, நெற்றியில் மணியாலான நெற்றிப்பட்டை அணிந்து, இடையில் மடிப்புகளுடன் கூடிய அரையாடை அணிந்தவாறு, இடது காலை குத்துக்காலிட்டு, வலது காலை அரை முழந்தாளிட்டு தாளமிட்ட படி அமர்ந்துள்ளனர்.
குறிப்புதவிகள்
பரமனையே பாடுவார்
சிற்பம்

பரமனையே பாடுவார்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்