சிற்பம்
சமணர் கழுவேற்றம்
சமணர் கழுவேற்றம்
சிற்பத்தின் பெயர் | சமணர் கழுவேற்றம் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சமணம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
சமணர்கள் கழுவேற்றம்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பாண்டிய நாட்டில் திருஞானசம்பந்தருடன் அனல் வாதம், புனல் வாதத்தில் ஈடுபட்ட சமணர்கள் தங்கள் வாதத்தில் தோற்றதால் கழுவேற்றப்பட்ட காட்சி. இச்சிற்பத்தில் நான்கு சமண முனிவர்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நான்கு கழுமரத்தில் ஏற்றப்பட்டு தொங்குகின்றனர். தலை சாய்ந்து தொங்குகின்றது. கழுவேற்றப்பட்ட நான்கு சமண முனிவர்களின் அருகில் நிற்பவர் பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் எனப்படும் கூன் பாண்டியனாயிருக்கலாம். அல்லது அவனது அமைச்சர் குலச்சிறையாராய் இருக்கலாம். ஆணை நிறைவேற்றுமுகமாய் அவர் நிற்பது தெரிகிறது. சமணர் கழுவேற்றம் என்ற ஒன்று நடந்ததா என்பதற்கு முறையான ஆதாரங்களை வரலாற்று ஆய்வாளர்கள் தேடுகின்றனர். ஏனெனில் அரசர்கள் சமயப் பொறையுடன் இருந்ததற்கான பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. எனினும் இச்சிற்பத் தொகுதியில் காட்டப்படும் கழுவேற்றக் காட்சி சேக்கிழாரின் பெரியபுராணத்தில் கூறப்பட்டமைக்கு ஏற்ப சிற்பமாக்கப்பட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
சமணர் கழுவேற்றம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |