சிற்பம்
காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்
சிற்பத்தின் பெயர் | காரைக்கால் அம்மையார் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
தமக்கொரு தந்தையும் தாயுமின்றி தானே உதித்த தகைமையான் அம்மையே என விளித்த அருட்பெருங் கடலாகிய காரைக்கால் அம்மையார்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
காரைக்கால் அம்மையாரைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் திருத்தொண்டத்தொகையுள் ‘பேயார்’ என்று குறித்துள்ளார். இவர் அருள் வரலாறு பெரியபுராணத்துள் விரித்துரைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானால் ‘அம்மையே’என்று அழைக்கப் பெற்ற பெருமை மிக்கவர். காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். இவர் காலம் கி.பி.300-500 ஆகும். இவர் இயற்றிய பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (22 பாடல்கள்), திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள் ஆகும். தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் அமைந்தன. கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். நாகை மாவட்டம் காரைக்காலில் பிறந்த புனிதவதியார் வணிகர் பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தார். தன் இளம் பிராயம் முதல் சிவபெருமானின் மீது நீங்காத அன்பு கொண்டவர். ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்றார். நடந்ததை கணவன் அறிந்து, இவர் தெய்வப் பெண்டிர் என்றறிந்து விலகி, மறுமணஞ் செய்து, தன் பெண் குழந்தைக்கு அவ்வம்மையாரின் பெயரையே சூட்டி, தன்னைக் காண வந்த புனிதவதியின் கால்களிலும் வீழ்ந்து பணிய, இறைவனின் திருவுள்ளத்தை இனிதறிந்த புனிதவதியார் பேயுடற் வேண்டிப் பெற்று, இறைவன் உறையும் மலையென்று கால்களாற் நடக்கவஞ்சி, தலைகீழாய் கயிலாயம் செல்கிறார். இக்காட்சியே இங்கு வடிக்கப்பட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
காரைக்கால் அம்மையார்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 33 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
சண்டேசுவர நாயனார்
சண்டேசுவர நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
16
|
0
|
0
|
0
உமையும் முருகனும்
உமையும் முருகனும்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
21
|
0
|
0
|