சிற்பம்
கூத்தர்
கூத்தர்
| சிற்பத்தின் பெயர் | கூத்தர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
| ஊர் | தாராசுரம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | வாழ்வியல் |
| ஆக்கப்பொருள் | கருங்கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
|
விளக்கம்
கூத்துக்கலையின் காட்சியாக விளங்கும் புடைப்புச் சிற்பம்
|
|
| ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நிகழ்கலைக் கூத்தாக இக்காட்சி விளங்குகின்றது. இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பின்புறமாக படுக்கை வாட்டில் கால்களை ஒன்று குவித்து யோகாசனத்தின் ஒரு நிலையில் நடுவில் உள்ள மனிதர் விளங்குகின்றார். அவரின் இருபுறமும் இசைக்கலைஞர்கள் இருவர் மத்தளம் இசைத்தபடி அவரை காண்கின்றனர். மக்கள் வழக்கத்திலிருந்த தெருக்கூத்துக் கலை நிகழ்வில் ஒன்றாக இக்காட்சி தெரிகின்றது. மூவரும் தொடை வரையிலான அரையாடையை இடைக்கட்டுடன் அணிந்துள்ளனர். காதுகளில் பத்ரகுண்டலங்கள் துலங்குகின்றன. கழுத்தணிகள், கையணிகள் அணிந்துள்ளனர். நடுவில் உள்ள கூத்தர் ஜடாபந்தம் போன்ற தலையலங்காரத்தை உடையவராய், இடைக்கட்டு முடிச்சு இருபுறமும் பறக்க, உடலை வில்லாய் வளைத்துள்ளார்.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
கூத்தர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 26 |
| பிடித்தவை | 0 |