Back
சிற்பம்

சேரமான் பெருமாள் நாயனார்

சேரமான் பெருமாள் நாயனார்
சிற்பத்தின் பெயர் சேரமான் பெருமாள் நாயனார்
சிற்பத்தின்அமைவிடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
ஊர் தாராசுரம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
விளக்கம்
திருக்கைலாய ஞான உலா, திருவாரூர் மும்மணிக்கோவை, பொன் வண்ணத்து அந்தாதி ஆகிய நூல்களை இயற்றிய சேரமான் பெருமாள் நாயனார்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சேரமான் பெருமாள் தேவார மூவருள் ஒருவரான சுந்தரமூர்த்திக்கு சம காலத்தவர் மற்றும் அவரின் நண்பராவார். சேர நாட்டு மன்னனாகிய சேரமான் பெருமாள் நாயனார், திருக்கைலாய ஞான உலா, திருவாரூர் மும்மணிக்கோவை, பொன் வண்ணத்து அந்தாதி ஆகிய மூன்று நூல்களை இக்காலக் கட்டத்தில் இயற்றினார். 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படும் இவர் கழறிற்றறிவார் நாயனார் எனவும் போற்றப்படுகிறார். இவர் சிவ பூசையின் போது தில்லை நடராசப் பெருமானின் மணியோசையை கேட்கும் பேறு பெற்றிருந்ததால் இப்பெயர் பெற்றார் எனவும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார். தாராசுரம் கோயிலில் வடிக்கப்பட்டுள்ள 63 நாயன்மார்களின் கதை வடிவச் சிற்பங்களில் உள்ள சேரமான் பெருமாள் நாயனார் சிற்பம் அவர் சுந்தரரை வணங்கி வரவேற்று நிற்கும் காட்சியாக அமைந்துள்ளது. சுந்தரர் தனது நண்பரான சேரமான் பெருமாளைக் காண சென்ற பொழுது அவரை யானை, சேனைகளோடு சென்று எதிர் கொண்டு அழைக்கிறார். இச்சிற்பத்தில் அரசனுக்குரிய ஆடையணிகளுடனும், சுந்தரர் சிவனடியாராகவும் காட்டப்பட்டுள்ளனர்.
குறிப்புதவிகள்
சேரமான் பெருமாள் நாயனார்
சிற்பம்

சேரமான் பெருமாள் நாயனார்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 20
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்