சிற்பம்
கண்ணப்பர்
சிற்பத்தின் பெயர் கண்ணப்பர்
சிற்பத்தின்அமைவிடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
ஊர் தாராசுரம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
விளக்கம்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
திருக்காளத்தி மலையில் வேடர் குலத்தில் பிறந்த திண்ணனார் அன்பினால் இறைவனின் அடியவராய் அருகில் நிற்கும் அனுமதி பெற்றவர். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் காணப்படும் கண்ணப்பர் தனிச் சிற்பம் இரு கைகளையும் குவித்து வணங்கிய நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. கண்ணப்பர் வேடுவராதலால் கால்களில் செருப்பணிந்தும், அரையில் தோலாடை உடுத்தியும், இடது தோளில் சாத்தப்பட் வில்லுடனும், முதுகில் அம்புகள் உள்ள அம்பறாத்தூணியுடனும் உள்ளார். அடியவர் தன் காதுகளில் பத்ர குண்டலங்களும், கைகள், கைழுத்தில் உருத்திராக்கத்திலான அணிகளும் அணிந்துள்ளார். கண்ணப்பர் தாடி, மீசையுடன் காணப்படுகிறார்.
குறிப்புதவிகள்
கண்ணப்பர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்