சிற்பம்
கழற்சிங்க நாயனார்
கழற்சிங்க நாயனார்
சிற்பத்தின் பெயர் | கழற்சிங்க நாயனார் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கழற்சிங்க நாயனார், பல்லவ மன்னர்களின் குலத்தின் வழி வந்தவர். சிவபெருமானின் மீது அளவற்ற அன்பு கொண்ட இவர், தன்னுடைய அன்றாடப் பணிகளில் எது விடுபட்டாலும், சிவ வழிபாட்டை தவறாது செய்து விடும் சிறந்த சிவ பக்தர் ஆவார். சிவ அருளின் காரணமாக நாட்டையும் அறநெறி தவறாது ஆட்சி செய்து வந்தார். இவர் வடபுலத்து மன்னர்களையெல்லாம் வென்று வாகை சூடி பொன்னும், பொருளும் பெற்றார். அவற்றை எல்லாம் இறைவனின் ஆலய வழிபாட்டிற்கும், அடியார்களுக்கும் வழங்கி வந்தார். ஒரு முறை திருவாரூர் கோயிலுக்கு தனது பட்டத்தரசியுடன் இறைவனை வணங்கச் சென்றார். அங்கிருந்த மண்டபங்களில் இறைவனுக்குரிய மாலைகளை பலர் தொடுத்துக் கொண்டிருந்தனர். அம்மலர்களின் வாசனையால் கவரப்பட்ட அரசியார் அவற்றுள் ஒன்றையெடுத்து தனது மூக்கில் நுகர்ந்தார். இச்செயலைக் கண்ணுற்ற செருத்துணையார் என்னும் சிவனடியார் வெகுண்டு அங்கிருந்த கத்தியால் அரசி என்றும் பாராமல் சிவ நிந்தனை செய்ததாய் கருதி அரசியாரின் மூக்கினை அரிந்தார். இச்செய்தியறிந்த கழற்சிங்க நாயனார் செருத்துணையாரை வினவ, அவர் உள்ளது உரைத்தார். சிவனடியாரின் மெய்க்கூற்றை கேட்ட அரசன் இறைவனுக்குரிய மலர்களை அரசியின் கைகளன்றோ முதலில் எடுத்தது என்று கூறி தன் வாளால அரசியின் கைகளை வெட்டினார். நாயன்மார்களுள் ஒருவரான செருத்துணையார் தம்மை விட அரசர் கழற்சிங்கரே சிறந்த சிவ பக்தர் என்பதை உணர்ந்து சிலிர்த்தார். இச்சிற்பக் காட்சியில் அரசியின் கைகளை இடது கையால் பிடித்து வலது கையில் உள்ள வாளால் வெட்டத் துணிகிறார். மன்னர் கிரீடத்துடன், நன்கு அணி செய்யப்பட்டவராய் காட்சியளிக்கிறார். அரசியார் குந்தளம் தலைக்கோலத்துடன், காதணி, கழுத்தணி, காலணி கொண்டு, நீண்ட பட்டாடையுடன் காட்டப்பட்டுள்ளார். பல்லவ மன்னரான மூன்றாம் நந்திவர்மனே, கழற்சிங்க நாயனார் என்பது ராசமாணிக்கனாரின் பெரிய புராண ஆராய்ச்சி நூல் தகவல். இராஷ்டிர கூட அரச மரபில் வந்த சிறந்த சமண பக்தரான அமோகவர்ஷ நிருபதுங்கன் மகள் சங்கா தான் தண்டிக்கப்பட்ட பட்டத்துஅரசி என்பதும் ராசமாணிக்கனாரின் ஆராய்ச்சி முடிவு.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
கழற்சிங்க நாயனார்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
சிறப்புலி நாயனார்
சிறப்புலி நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
15
|
0
|
0
|
0
உமையும் முருகனும்
உமையும் முருகனும்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
19
|
0
|
0
|