சிற்பம்
அக்னி
அக்னி
சிற்பத்தின் பெயர் | அக்னி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
நெருப்புக் கடவுள் அக்னி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
எட்டு திக்கு கடவுளர்களில் ஒருவராகிய அக்னி நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். அரியகம் எனும் அசைந்து தொங்கும் தாமங்களை உடைய பாத அணி அழகு செய்யும் இடது காலை ஊன்றி, வலது காலை வளைத்து முன் வைத்துள்ள அக்னி தேவர் வைஷ்ணவ நிலையில் நின்றுள்ளார். முன்னிரு கைகளால் வணங்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளார். பின்னிரு கைகளில் அக்க மாலையும், கெண்டியும் பிடித்துள்ளார். தலையில் சுடர் முடி எனப்படும் அரசிலைப் போன்ற வடிவில் கேசத்தை தீச்சுடர் போல அடுக்கடுக்காய் மேல் நோக்கி அமைக்கப்படும் தலைக்கோலத்தைக் கொண்டுள்ளார். கழுத்தில் கண்டிகை, அரும்புச்சரம், சவடியும், தோள்களில் வாகுமாலையும், கைகளில் பூரிமத்துடன் கூடிய தோள்வளை, இரண்டிரண்டு முன் வளைகள் ஆகியன அணிந்துள்ளார். இடையில் அரைப்பட்டிகை முகப்புடன் விளங்குகிறது. தொடை வரையிலான அரையாடை அணிந்துள்ளார். குறங்கு செறி எனும் இடையணி தொடையில் தொங்குகின்றது. இடைக்கட்டின் முடிச்சு பின்புறம் இருபுறமும் கட்டப்பட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
அக்னி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
கணம்புல்ல நாயனார்
கணம்புல்ல நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
15
|
0
|
0
|
0
உமையும் முருகனும்
உமையும் முருகனும்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
21
|
0
|
0
|
0
கழற்சிங்க நாயனார்
கழற்சிங்க நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
18
|
0
|
0
|