சிற்பம்
திருஞானசம்பந்தர் (ஆளுடையப் பிள்ளையார்)
திருஞானசம்பந்தர் (ஆளுடையப் பிள்ளையார்)
சிற்பத்தின் பெயர் | திருஞானசம்பந்தர் (ஆளுடையப் பிள்ளையார்) |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
63 நாயன்மார்களுள் ஒருவரும், தேவார மூவருள் முதல்வருமாகிய திருஞான சம்பந்தர் (ஆளுடைய பிள்ளை)
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், அந்தணர் மரபிலே, கவுணியர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்ற போது, அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுதது. அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டினார். குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார். இச்சிற்பக் காட்சியில் சம்பந்தர் சிறு பாலகனாய் உள்ளார். சம்பந்தரின் வலது புறம் அம்மையப்பர் இடப வாகனத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றனர். ஆளுடைய பிள்ளையின் இடது புறம் அவர் தந்தை அந்தணர்க்குரிய தோற்றத்துடன் ஒரு சிறு கோலை கையில் வைத்து ஓங்கியவாறு (குழந்தையை மிரட்டும் பாணியில்) நின்ற படி சம்பந்தரை விசாரிக்கிறார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
திருஞானசம்பந்தர் (ஆளுடையப் பிள்ளையார்)
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 22 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
சிறப்புலி நாயனார்
சிறப்புலி நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
16
|
0
|
0
|
0
கழற்சிங்க நாயனார்
கழற்சிங்க நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
18
|
0
|
0
|
0
சண்டேசுவர நாயனார்
சண்டேசுவர நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
15
|
0
|
0
|
0
கணம்புல்ல நாயனார்
கணம்புல்ல நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
15
|
0
|
0
|