சிற்பம்
உருத்திரபசுபதியார்
உருத்திரபசுபதியார்
சிற்பத்தின் பெயர் | உருத்திரபசுபதியார் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
உருத்திர மந்திரத்தை உயிரெனப் போற்றிய உருத்திர பசுபதியார்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் சோழ நாட்டில் தலைசிறந்து விளங்கும் திருத்தலையூரிலே அந்தணர் குலத்திலே பசுபதியார் அவதரித்தார். இவர் சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையும், உருத்திர நாமத்தினையும் பெருஞ்செல்வமெனக் கொண்டிருந்தார். இறையனார் மீது கொண்டிருந்த பற்றினால் ஸ்ரீ உருத்திர மந்திரத்தை மறவாது ஓதி வந்தார். இவர் தொடர்ந்து சில நாட்கள் தாமரைத் தடாகத்திலே கழுத்தளவு தண்ணீரில் இரவு பகலாக நின்று கொண்டு இருகைகளளயும் தலைமேற் குவித்துக் கொண்டு இருகைகளையும் தலைமேற் குவித்துச் சிவனை மறவாத சிந்தையராய் அருமறையாகியப் பயனாகிய திருவுருத்திரத்தை வழுவாது ஓதும் நியதியடைவராய் இருந்தார். இவர் தம் அருந்தவப் பெருமையையும் வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய இறைவர் இந்நாயனாருக்கு தீதிலாச் சிவலோக வாழ்வினை நல்கியருளினார். இக்காட்சியே இங்கு சிற்பமாக காட்டப்பட்டுள்ளது. சிவபெருமான் உமையன்னையுடன் இடப வாகனத்தில் ஏறி உருத்திர பசுபதியாருக்கு காட்சியளித்து முக்தியருளுகிறார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
உருத்திரபசுபதியார்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
கலிக்கம்ப நாயனார்
கலிக்கம்ப நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
16
|
0
|
0
|
0
கழற்சிங்க நாயனார்
கழற்சிங்க நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
18
|
0
|
0
|