சிற்பம்

பூசலார் நாயனார்

பூசலார் நாயனார்
சிற்பத்தின் பெயர் பூசலார் நாயனார்
சிற்பத்தின்அமைவிடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
ஊர் தாராசுரம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
விளக்கம்
இறைவனுக்கு அகத்துள் கோயில் எழுப்பிய அடியார் பூசலார்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
தொண்டை நாட்டில் உள்ள திருநின்றவூரில் பிறந்த பூசலார் சிறந்த சிவபக்தர். சிவபெருமானுக்கு ஒரு கோயில் எழுப்ப வேண்டும் என்ற பேரவா கொண்டவர். எனினும் அதற்கான நிதி ஆதாரமின்மையால் தன் மனத்தின் கண் சிறிதுசிறிதாகப் பெரும்பொருள் சேர்த்தார். திருப்பணிக்கு வேண்டிய கல் மரம் முதலிய சாதனங்களையும் பணிசெய்தற்குரிய தச்சர் முதலிய பணியாளர்களையும் மனத்தில் தேடிக்கொண்டார். நல்ல நாள் பார்த்துத் திருக்கோயிற் பணியைத் தம் மனத்துள்ளே தொடங்கி இரவும் துயிலாமல் அடிப்படை முதல் உபானம் முதலிய வரிசைகளை அமைத்து உரிய அளவுப்படி விமானமும் சிகரமும் அமைத்து அதன்மேல் தூபியும் நட்டனர். சுதைவேலை முடித்து அக்கோயிலினுள்ளே கிணறு திருக்குளம், மதில் முதலான எல்லாம் வகுத்தமைத்து இவ்வாறு தம்மனத்தில் உருவாகிய திருக்கோயிலுள்ளே சிவபெருமானை எழுந்தருளச் செய்வதற்கேற்ற நல்லநாளும் வேளையும் நிச்சயித்தார்.அந்நாளில் காடவர்கோனாகிய பல்லவ மன்னன் ஒருவன் சிறப்புமிகு காஞ்சிபுரத்தில் எண்டோளீசற்கு கற்றளி எடுப்பித்து, ஒரு நன்னாளில் நன்னீராட்டி இறைவனை எழுந்தருளப் பண்ண நாள் குறித்தான். இவ்விருவர் குறித்த நாளும் ஒரே நன்னாளாகையால், இறையனால் மன்னனின் கனவில் தோன்றி தன் அடியார் பூசலார் கட்டிய கோயிலில் நாளை எழுந்தருள வேண்டியிருப்பதால், மற்றொரு நாளைக்கு மன்னனின் கோயில் நன்னீராட்டை குறிக்கும்படி கூறினார். பல்லவ மன்னன் திருநின்றவூர் சென்று பூசலார் கட்டிய கோயிலைக் காண ஆவலுற்று வினவிய போது, பூசலார் தன் மனத்துள் கட்டிய கோயிலைப் பற்றி விவரித்தார். வியப்புற்ற அரசன் பூசலார் அடி பேணி திரும்பினான். பூசலார் நாயனார் தாம் கட்டிய மனக்கோயிலிலே குறித்த நற்பொழுதில் சிவபெருமானைத் தாபித்துப் பூசனைகள் எல்லாம் பெருஞ்சிறப்புடன் பலநாட்கள் பேணிச் செய்திருந்து சிவபெருமான் திருவடி நீழலையடைந்தார். இச்சிற்பக் காட்சியில் பூசலார் யோக நிலையில் அமர்ந்துள்ளார். பூசலார் மனத்துள் கட்டிய சிவபெருமானுக்கான கோயில் அருகில் காட்டப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
பூசலார் நாயனார்
சிற்பம்

பூசலார் நாயனார்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 17
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்