Back
சிற்பம்

சித்தத்தைச் சிவன் பால் வைத்தார்

சித்தத்தைச் சிவன் பால் வைத்தார்
சிற்பத்தின் பெயர் சித்தத்தைச் சிவன் பால் வைத்தார்
சிற்பத்தின்அமைவிடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
ஊர் தாராசுரம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
விளக்கம்
சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில் பாடியுள்ள தொகையடியார்களுள் ஒரு வகையினர் சித்தத்தைச் சிவன் பால் வைத்தார்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சுந்தரர் தம் திருத்தொண்ட தொகையில் 60 தனியடியார்களையும், ஒன்பது தொகையடியார்களையும் குறிப்பிட்டுள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு கூட்டத்தினர் அல்லது குழுவினைத் தொகுத்துச் சுட்டுவதைத் தொகை அடியார்கள் என்பர். தொகையடியார்கள் ஒன்பதின்மர் தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை இல்லாத புலவர், பத்தராய்ப் பணிவார்கள், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன் பால் வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார், முழு நீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிச்சார்ந்தார் ஆகியோர் ஆவர். இவர் இன்னார் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாத வேறு பலரையும், தம் காலத்துக்கு முன்பும், பின்பும் வாழ்ந்தவர்களையும், வரவிருப்பவர்களையும் போற்றும் நோக்கில் தொகையடியார் வணக்கத்தைச் சுந்தரர் மேற்கொண்டுள்ளார். வரலாற்று எல்லைக்குள் உட்படாதவர்களையும், சிறப்பிக்கும் சுந்தரரின் இப்பண்பு பெருஞ்சிறப்புக்கு உரியது. இச்சிற்பத்தில் சித்தத்தைச் சிவன்பால் வைத்தாருள் மூவர் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக இடது காலை குத்துக்காலிட்டு, வலது காலை அரை முழந்தாளிட்டு அமர்ந்து, நெற்றியில் உருத்திராக்கக் கொட்டைகளால ஆன நெற்றிப்பட்டை அணிந்து, நீள் காதுகள் உடையவராய், கைகளில் உருத்திராக்க தோள்வளை, முன் வளைகள் பூண்டு, இரு கைகளையும் கூப்பி வணங்கி நிலையில் கண்களை மூடி சிவ வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் முன்னால் கோயில் ஒன்று காட்டப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
சித்தத்தைச் சிவன் பால் வைத்தார்
சிற்பம்

சித்தத்தைச் சிவன் பால் வைத்தார்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்