சிற்பம்
தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி
சிற்பத்தின் பெயர் | தட்சிணாமூர்த்தி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
கல்லாலின் புடையமர்ந்து ஆறங்கம் அருளிய தென்முகக் கடவுள்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தென்முகக்கடவுள் (தட்சிணாமூர்த்தி) கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து நான்மறைகளையும், ஆறங்கங்களையும் உயிர்க்குலத்திற்கு ஓதுவிக்கும் காட்சி. ஆலமர்ச்செல்வன் நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். ஜடாபாரத்துடன் விளங்கும் நான்மறையோதி வலதுகாலை தொங்கவிட்டு, இடது காலை மடக்கியும் வீராசனத்தில் அமர்ந்துள்ளார். மறையோதி மாமுனியின் வலது முன்கை சின் (வேதப்பொருளுரை) முத்திரை காட்டுகின்றது. இடது முன் கையில் சுவடிகளைத் தாங்கியுள்ளார். மேலிரு கரங்களில் வலதில் அக்கமாலையும், இடதில் தீயகலும் பிடித்துள்ளார். முப்புரிநூல் வலது கை வழியாக இடது தோளின் வழியே செல்கிறது. பிரம்ம முடிச்சு இட மார்பில் காட்டப்பட்டுள்ளது. ஜடாபாரம் தலைக்கோலமாக அழகு செய்கிறது. தொய்யலுடன் கூடிய நெற்றிப்பட்டை நெற்றியில் விளங்குகிறது. இடது செவியில் பத்ரகுண்டலமும், வலது செவியில் மகர குண்டலமும் அணி செய்கின்றன. கழுத்தில் கண்டிகை, நீண்ட உருத்திராக்க மாலை, பதக்கத்துடன் கூடிய மணி மாலை ஆகியன அணிந்துள்ளார். கைகளில் பூரிமத்துடன் கூடிய தோள் வளை, முன்வளை, விரல்களில் வளையங்கள், பாதங்களில் சதங்கை ஆகியன அணி செய்கின்றன. மறையோதியின் இடையாடை முடிச்சுகள் ஆசனத்தில் வீழ்ந்துள்ளன. தென்முகக் கடவுளின் ஆசனத்திற்கு கீழே நான்கு முனிவர்கள் காட்டப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பெண். இரு கைகளையும் மேலே தூக்கி குவித்து வணங்குகின்றார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
தட்சிணாமூர்த்தி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி
சைவம், கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
15
|
0
|
0
|
0
தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி
சைவம், கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
12
|
0
|
0
|