சிற்பம்
இலகுளீசர்
சிற்பத்தின் பெயர் இலகுளீசர்
சிற்பத்தின்அமைவிடம் அரிட்டாப்பட்டி சிவன் குடைவரை
ஊர் அரிட்டாப்பட்டி
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் கருவறை நுழைவாயில்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர்
விளக்கம்
a:1:{i:0;s:3454:"அரிட்டாப்பட்டி சிவன் குடைவரை 1200 ஆண்டுகள் பழமையானது. முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைக் காட்டுகின்றது. இக்குடைவரைக் கோயிலின் முன்பு இருபுறமும் குடையப்பட்டுள்ள முகப்புகளில் இலகுளீசர் வடிவமும், கணபதி உருவமும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இலகுளீசர் இலகுலீசர் குஜராத்திலுள்ள காயாவரோகண் பகுதியில் கி.பி. 1-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர். சைவ சமயத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றான பாசுபத சைவத்தை வழிபாட்டுக்கான கொள்கையாக நெறிப்படுத்தியவர். பாசுபத சைவநெறி முற்காலப் பாண்டியர் காலத்தில் தென்தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு, தொடர்ந்து சோழர்கள் காலத்தில் வளர்ச்சி பெற்ற நிலையைக் காணமுடிகிறது. முற்காலப் பாண்டியரின் குடைவரைக் கோயிலின் முன்புறம் உள்ள இலகுளீசர் இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டவாறும், இடது கையில் தண்டத்தினை ஏந்தியபடியும் அமர்ந்துள்ளார். நெற்றியில் பட்டமும், தலையில் முகப்புடன் கூடிய மகுடமும் அணிந்துள்ளார். நீள் காதுகள் முன் தோள்வரை தொங்குகின்றன. கழுத்தில் சரப்பளி, கையில் கேயூரம் அணி செய்கின்றன. கணுக்கால் வரையிலான முழுநீள கீழாடை மடிப்புகளுடன் காட்டப்பட்டுள்ளது. இடது கையில் கொண்டுள்ள தண்டத்தில் நாகம் ஒன்று சுற்றியபடி காட்டப்பட்டுள்ளது. உத்தரீயம் எனப்படும் மேலாடை வலது கையின் வழியே பின்புறம் செல்கிறது. இச்சிற்பத்தை நோக்குகையில், இலகுளீசர் சிற்பஅமைதி கூறும் இலக்கணங்கள் தமிழக சிற்ப மரபுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளமை நன்கு புலனாகிறது. ";}
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டி என்னும் சிற்றூரின் மேற்கில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் கழிஞ்சமலையில் உள்ளது. இம்மலையின் பழம்பெயர் திருப்பிணையன் மலை என்பதாகும். இம்மலையின் மேற்குப்பகுதியில் ஓர் அழகிய குடைவரைக் கோயில் வெட்டப்பட்டுள்ளது. இது சிவபெருமானுக்காக கி.பி.8-ஆம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். ஒரு சிறிய கருவறையும், அழகிய முன் மண்டபத்தையும் கொண்டு விளங்குகிறது. இயற்கையான பாறையிலிலேயே உருவாக்கப்பட்ட இலிங்கம் கருவறையில் உள்ளது. மண்டபத்தில் முன்வரிசையில் மட்டும் இரண்டு தூண்களும், இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. இக்கோயில் இன்று இவ்வூர் மக்களால் “இடைச்சி மண்டபம்“ என்று அழைக்கப்படுகின்றது. குடைவரைக் கோயிலின் வெளிப்புறச் சுவரில் விநாயகர், லகுலீசர் சிற்பங்கள் வெட்டப்பட்டுள்ளன. தென்னகத்தில் காணப்படும் லகுலீசர் சிற்பங்களில் இது மிக முக்கியமானது எனலாம்.
குறிப்புதவிகள்
இலகுளீசர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 7
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்