சிற்பம்

சண்டேசர்
சிற்பத்தின் பெயர் | சண்டேசர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | புள்ளமங்கை |
ஊர் | பசுபதி கோயில் |
வட்டம் | பாபநாசம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
விளக்கம்
சிவனின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவரான சண்டேசர்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சண்டேசுவரர் சிவபெருமானால் மகனாக ஏற்றுகொள்ளப்பட்டுச் சண்டீசப்பதம் அளிக்கப்பட்ட பெருமைக்குரியவர். கிருதயுகத்தில் "பிரசண்டர்' எனவும், திரேதாயுகத்தில் "விக்ராந்த சண்டிகேசுவரர்' என்றும், துவாபரயுகத்தில் "விஷ சண்டிகேசுவரர்' என்றும், கலியுகத்தில் "வீரசண்டிகேசுவரர்' என்றும் நான்கு யுகங்களிலும் நான்கு விதமாக அழைக்கப்படுபவர். மண்ணையாற்றின் தென்கரையில் சேய்ஞலூர் என்னும் சிற்றூரில் எச்சதத்தன்-பவித்திரையின் புதல்வராகப் பிறந்தவர் விசாரசருமர். மண்ணையாற்றங் கரையில் பசுக்கள் மேய்ப்பதை விடுத்து, மணலால் சிவலிங்கம் அமைத்து, பசுக்கள் சொரிந்த பாலை லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தார் விசாரசருமர். இதையறிந்த அவரின் தந்தை, அவரை கோலால் அடித்தார். ஆனால் அவர் தொடர்ந்து சிவபூஜையில் ஈடுபட்டார். இதனால் கோபம் அதிகமாகி, அபிஷேகப் பால் குடத்தை எட்டி உதைத்து சிவலிங்கத்தை சிதைத்தார் அவர் தந்தை. சிவ பக்தியால், கீழே கிடந்த கோலை எடுத்தார். அது மழுவாக மாறியது. அதைக் கொண்டு தந்தையின் இரு கால்களையும் வெட்டினார் விசாரசருமர். அப்போது இறைவன் காட்சி தந்து, ""இனி நாமே உமக்கு தந்தையாவோம்.'' என்று கூறி, தம் திருத்தொண்டர்களுக்கு அவரைத் தலைவராக்கி, தன் சிரசின் மீதிருந்த கொன்றை மாலையை அவருக்குச் சூட்டி "சண்டேசுரபரம்' தந்தருளினார். சிவனருளால், விசாரசருமர் "சண்டேசுவரர்' ஆனார். புள்ளமங்கை திருக்கோயிலில் பீடத்தின் மேல் சுகாசனத்தில் அமர்ந்துள்ள சண்டேசர், ஜடாபாரம் தரித்து, நெற்றியில் விளங்கும் கண்ணி மாலையுடன், இடது கையை தொடையில் வைத்தபடி, வலது கையில் மழுவேந்தியவராய், சரப்பளி, யக்ஞோபவிதம், வீரக் கழல், காற்சதங்கை அணிந்து காணப்படுகிறார். அரையாடை உடுத்தி, வட்ட முகமும் தடித்த உதடுகள், பெரிய மூக்குமாய், விரிந்த மார்புடன் சண்டேசரின் உருவமைதி வடிக்கப்பட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |